|
|||||
காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் 29 அமைப்புகள்! மத்திய அமைச்சர் தகவல்! |
|||||
‘‘காஷ்மீர் மாநிலத்தில் 29 அமைப்புகள் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது தொடர்பாக டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியலமைப்பின் 73வது சட்டத் திருத்தத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 29 துறைகளின் செயல்பாடுகள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவை பஞ்சாயத்து நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. சொந்த நிதியை உருவாக்குதல், கட்டிட அனுமதி கட்டணம், கேளிக்கை வரி, விளம்பரம், பேனர்கள், பல்வேறு வகையான வியாபாரங்கள் மற்றும் தொழில்கள் உள்ளிட்டவை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கொடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14வது நிதி ஆணையத்தின் மத்திய மானியமாக ரூ.4.335 கோடியை வழங்குவதற்கு இந்த தேர்தல் வழிவகை செய்யும். |
|||||
by Mani Bharathi on 30 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|