LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

கனவு இல்லம் என்ற பெயரோடு ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கனவு இல்லம் என்ற பெயரோடு தமிழில் சாகித்திய அகாதமி மற்றும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஆகிய இரு விருதுகளையும் பெற்ற ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, முனைவர் இ. சுந்தரமூர்த்தி, (பூமணி) பூமாணிக்கவாசகம், முனைவர் கு. மோகனராசு இமையம், வெ.அண்ணாமலை ஆகிய ஆறு பேருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை வழங்கியுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் ஈரோடு சென்னிமலை பகுதியினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ந.செகதீசன் 2004-ஆம் ஆண்டு இவருடைய 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை தொகுப்பு சாகித்திய அகாதமி  விருது வென்றது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். கவிஞர்,ஓவியர் சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர் எனப் பன்முகம் கொண்டவர்.

 புவியரசு அவர்கள் உடுமலைப்பேட்டை அருகே உள்ள லிங்கவ நாயக்கன் புதூர் பகுதியினைச் சேர்ந்தவர். இயற்பெயர் சு.ஜெகநாதன் ஆகும். 'கையொப்பம்' என்ற இவருடைய கவிதை தொகுப்பு 2009 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது. மேலும் 2007-ல் இவருடைய 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூல் சாகித்திய அகாதமி வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

 இ.சுந்தரமூர்த்தி கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியினைச் சேர்ந்தவர். 2012-ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர். 

பூமணி என்று புகழ்பெற்ற பூமாணிக்கவாசகம் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். பிறகு, வெக்கை, வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள். அஞ்ஞாடி புதினம் 2014 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது.

முனைவர் கு. மோகனராசு 2014 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர். திருக்குறளை மக்களிடம் முழுமூச்சோடு பரப்பும் பணி செய்பவர்.

 இமையம் என்று அறியப்படும் வெ. அண்ணாமலையார் அவர்கள் கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்தவர்.2020 ஆம் ஆண்டு 'செல்லாத பணம்'என்ற இவருடைய புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்றது.

by R.Gnanajothi   on 08 Jul 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு  கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. அதில் முக்கிய 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
"தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு" தேசியக் கருத்தரங்கம் 2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க நிகழ்வில் 20 ஆதீனங்களும் ஒரே மேடையில்
தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கிவைத்து 24 மொழிகளில் தமிழ் பாடநூல்களை தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள மக்கள் கலைவிழா தொடங்கியது தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத்துறை முன்னெடுத்துள்ள மக்கள் கலைவிழா தொடங்கியது
இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்! இலக்கியப் பேச்சாளர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்!
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். நூல்  வெளியீட்டு விழா அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ். நூல்  வெளியீட்டு விழா
கோவையில் அமைக்கப்பட்டுள்ள  அருகலை (Wi-Fi )மரம் கோவையில் அமைக்கப்பட்டுள்ள அருகலை (Wi-Fi )மரம்
மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க 'தேன்சிட்டு இதழ்', 'ஊஞ்சல் இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க 'தேன்சிட்டு இதழ்', 'ஊஞ்சல் இதழ்' பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.