LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாடு:

அன்ன சத்திரமும், ஆலயமும் கட்டுவதைவிடச் சிறந்தது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றான் மகாகவி பாரதி. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation-TNF) நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறது. அறக்கட்டளை, சிகோகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, மே மாதம் 24, 25 தேதிகளில் இந்த மாநாட்டைச் சிகாகோவில் Phesant Run Resort, St.Charles, Illinois என்ற இடத்தில் நடத்தவிருக்கிறது.


இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, மதுரை முத்து, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், லேனா தமிழ்வாணன், கவிஞர் மகுடேஸ்வரன் போன்றோர் இதில் அடங்குவர். சின்னத்திரை நட்சத்திரங்கள் தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கும் இவ்விழாவில், இலக்கியச் சொற்போர், ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பின்னணிப் பாடகர் கார்த்திக் குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். 'சங்கம் முதல் சிலிகான்வரை' என்ற தலைப்பில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் வழங்கும் சேர்ந்திசை (chorus orchestra) மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம்.


சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், மாநாட்டு நிகழ்ச்சிகள் கூடுதல் சிறப்பாக அமையவிருக்கின்றன
தமிழ்நாடு அறக்கட்டளை 1974ல் ஆரம்பிக்கப்பட்டு, அனைத்து அமெரிக்க மாநிலத் தமிழார்வலர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பின்தங்கிய கல்வி நிலையங்களுக்குக் கட்டமைப்பு உதவி, கல்வி மேம்பாடு, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, ஆசிரியர் மேற்கல்வி, தகவல் தொழில்நுட்ப கல்வி வசதி, மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான உதவிகள் என்று பலவகைத் திட்டங்களை, நடத்துகிறது. உதாரணமாக, சீர்காழியில் வளர்ச்சி குன்றிய ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான தங்கும் விடுதி, உணவு, உடை, கல்வி பெறுவதற்கான சிறப்புக் கல்விக்கூடம் போன்றவற்றைச் சமீபத்தில் வழங்கியுள்ளது. வட, தென் ஆற்காடு மாவட்டங்களில், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் ABC Project என்ற செயல்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.


இந்த நலத்திட்டங்களை விரிவு படுத்துவற்கான நிதி திரட்ட, அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடத்த்தப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் பெறப்படும் நன்கொடைகள் மேற்சொன்ன கல்விப் பணிகளுக்கு வழங்கப்படும்.


இனிய இலக்கிய நிகழ்வுகள், கவின்மிகு கலைநிகழ்ச்சிகள், தரமான தங்கும் வசதி, சுவையான உணவு என்று மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்பாடு ஒருங்கிணைப்பை அறக்கட்டளைத் தலைவர் பி.கே. அறவாழியும், தமிழ்ச் சங்கத் தலைவர் சோமுவும் செய்து வருகிறார்கள். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.


இந்தச் சேவைக்கு நிதி வழங்கவும், மாநாட்டு நுழைவுச்சீட்டு வாங்கவும், விபரங்களுக்கும்: www.tnfconvention.org.

 

by Swathi   on 23 May 2014  1 Comments
Tags: Tamilnadu Foundation   தமிழ்நாடு அறக்கட்டளை                 
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாடு: தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாடு:
கருத்துகள்
05-Jul-2014 23:21:46 ravikumar said : Report Abuse
vaalthukkaL
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.