LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ் வளர்ச்சி செய்திகள் Print Friendly and PDF

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசுப் பணிக்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு மற்றும் திறனறிவு தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு, திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் என்பவர் உள்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் , ‘தமிழ் மொழித்தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுகள் என இரு பகுதிகளாக, தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆங்கில வழியில் படித்த விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏற்கெனவே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 100 சதவீத அரசு வேலைவாய்ப்பு என்பது போலாகிவிடும்,’என வாதிடப்பட்டது.

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் “விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்ற அரசு வாதம் சரியானது தான்.

தமிழ் மொழித் தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மட்டுமே அரசு கூறுகிறதே தவிர, நூறு சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என வற்புறுத்தவில்லை. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். காலியாக உள்ள 6244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

குரூப் 4 தேர்வில் கீழ்காணும் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதில் தமிழ் போதிய திறன் இல்லாமல் வேலைவேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. எப்படி மக்களிடம் உரையாடமுடியும் , எழுத பேச முடியும் என்று தெரியவில்லை. இந்த 40% படிப்படியாக 60% ஆக உயர்த்தப்படவேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், தமிழ் படித்து பலரும் வேலையில்லாத சூழலில், படித்தவர்கள், புலமையுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட இது வழிவகை செய்யும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

குரூப் 4 தேர்வு வழி நிரப்பும் பணிகள்:
கிராம நிர்வாக அலுவலர்
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)
இளநிலை உதவியாளர் (பிணையம்)
வரித் தண்டலர் நிலை I
தட்டச்சர்
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III )
பண்டகக் காப்பாளர் (தமிழகம் விருந்தினர் இல்லம், உதகமண்டலம்)
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)
இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்)
வரித் தண்டலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)
சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை III ) (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்)

by Swathi   on 01 Jun 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.