|
|||||
கங்கா தீர்த்தம் மட்டுமின்றி அனைத்து ஆன்லைன் பொருட்கள் விற்பனைக்கும் தபால் துறை ஏற்பாடு! |
|||||
கங்கா தீர்த்தம் மட்டுமின்றி ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விற்பனையாகும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் ஏற்பாட்டை தபால் துறை செய்து வருகிறது. இந்தியா போஸ்ட்டின் இ.காம் வெப்சைட்டில் போய் பட்டனைத் தட்டினால் கங்கா தீர்த்தம் உங்களுக்குக் கிடைக்கும் வகையில் தபால் துறை ஏற்பாடு செய்து வருகிறது. தபால் துறையை நவீனமயம் ஆக்குவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தற்போது வங்கியாக செயல்படுவதுடன் இண்டியா போஸ்ட் மூலம் இ.காமர்ஸ் எனும் புதிய வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதில் கங்கா தீர்த்தம் முதல், மற்ற ஆன்லைன் ஷாப்பிங் போல துணிகள், கைப்பைகள், ஆயுர்வேத மூலிகை பொருட்கள், மலைவாழ் மக்களின் கைவினைப் பொருட்கள், மொபைல் போன்கள் என்று எல்லாம் கிடைக்கும். குறிப்பாக தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய வழிதேடும் சிறிய தொழில் முனைவோர் இந்த வெப்சைட்டில் பதிவு செய்து, தங்கள் பொருட்களை விற்க முடியும். இதில் பதிவு செய்ய விற்பனையாளர்களுக்கு ஆறு மாதம் வரை இலவசம். கட்டணம் கிடையாது. இதில் வாங்கும் பொருட்கள் ஸ்பீடு போஸ்ட் மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். அதற்கு உரிய குறைந்தபட்ச பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தபால் துறை அறிவித்துள்ளது. |
|||||
by Mani Bharathi on 20 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|