அன்புள்ள நண்பர்களே, வணக்கம் . சென்ற 20.11.17 (நாட்டு மாட்டு பண்ணை ) பதிவின் தொடர்ச்சி . "ஆ "காக்கும் அகமது ! - திந்திரி வனம் (திந்திரி என்றால் புளியமரம், புளியமரங்கள் மிகுதியாக வளந்துள்ள பகுதி திந்திரி வனம், இது மெல்ல தேய்ந்து சட்டென்று அடையாளப்படும் "திண்டிவனம்" என்று மருவி விட்டது ( திண்டிவனத்தில் திந்திரிஸ்வரர் கோவில் உள்ளது ) சரி வாங்க நண்பர் திரு.அகமது அவர்கள் பண்ணைக்குப் போகலாம் ! திண்டிவனத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டரில் ஆவணிப்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ள இடம் "பசார் கிராமம் " பாய் பண்ணை" என்றால் பேருந்துகள் நிற்கும் .சுமார் 205 ஏக்கர் நிலப் பரப்பளவில் திரு.அகமது அவர்களின் பண்ணை, கடக் நாத், அசில்,சிறுவிடை போன்ற பல வகை நாட்டுக்கு கோழி ரகங்கள் , முயல்கள் ,ஆடுகள் ,மீன்கள், வாழை, மா எலுமிச்சை, பழவகை மரங்கள்,மற்றும் நீளமான அடர்ந்த பெரிய நெல்லித் தோப்புகள்(ஆம்லா ) , .அகத்தி மரங்கள் தீவினப்புல், மூலிகை செடிகள் எனறு ஒருங்கிணைந்த பண்ணையாகவும், அகலமான குளங்கள்,கிணறுகள், பெரிய தோப்புகள். இவற்றின் நடுவில் நீண்ட விசாலமான கொட்டகையில் 200 கும் மேற்பட்ட வடநாட்டு கிர்,காங்கிரிட்ஜ்,சாஹிவால் மாடுகளும்,கன்றுகளும் காஞ்சிக் குட்டை பசுக்களும் எங்களை மகிழ்வித்தன . தேவையான பண்ணை ஆட்களை கொண்டு, அவர்கள் வசிக்க ( பிற மாநிலத்தவர்கள் ) சிறிய கிராமங்கள் . சிறிய சாலைகள் எனறு பிரமாதமாக உள்ளது திரு.அகமது அவர்களின் பண்ணை .ஹரியானா,குஜராத் போன்ற இடங்களில் இருந்து சினையாக உள்ள பசுக்களை வாங்கி வரும்போது, இவரது பண்ணையில் வந்து பிறக்கின்ற கன்றுகள், கலப்பின கன்றுகளாக இருப்பவற்றை தனியாக பராமரிக்கின்றார் . இவரது பால் அதிக அளவில் சென்னைக்கு தினமும் செல்கின்றது .(1 லிட்டர் 95 ரூபாய் ) திரு.அகமதுக்கு துணையாக அவரது தம்பி ! தம்பியுடையான், பாலுக்கு அஞ்சான் ! என்று பால் சந்தைப் படுத்துவதை கவனிக்கின்றார் .திரு.அகமது இயற்கை விவசாயத்தையும், நாட்டு மாடுகளையும் பெரிதாக மதிப்பதால் திரு.சுபாஷ் பாலேக்கர் , திரு .பசு ராகவன் போன்ற சான்றோர்களை அழைத்து வந்து அவர்கள் கருத்துகளை அறிந்து பண்ணையை மேம்படுத்தியுள்ளார் . நாட்டுப் பசுவின் பால் அனைவருக்கும் கிடைக்க "உங்களது சொந்த மாடு " என்கிற அருமையான திட்டம் வைத்துள்ளார். நம்மிடம் இட வசதி, பராமரிப்பு வசதி ,ஆட்கள் வசதி எதுவுமே இல்லை ஆனால் அதிக பால் (ஏ 2) கொடுக்கும் 1 வட நாட்டு மாட்டினை 80 முதல் 90 ஆயிரம் செலவு செய்து வாங்க முடியும் ! என்றாலோ, அல்லது பராமரிக்க முடியாத கறவையில் உள்ள வடநாட்டு பசு இருந்தாலோ ! இவரது பண்ணையில் கொண்டு விட்டால் அதனை பார்த்துக்கொள்கின்றார் . பசுவின் கறவைக்கு ஏற்ப அன்றாட பராமரிப்பு செலவு போக மீதி பால் தினமும் உங்களுக்கு கொடுத்து விடுகின்றார் அல்லது பாலுக்கு பதில் பணமாகவும் பெறலாம் . இந்த திட்டம் நமது வசதிக்கு ஏற்ப பல மாதிரிகளில்( Models ) உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் திரு.அகமது அவர்களை தொடர்பு கொண்டு முழு தகவல்களையும் பெறலாம் ."ஆ "காக்கும் அகமது - தொடர்பு கொள்ள : கைபேசி எண் - 8939991544. ஒருவேளை தொடர்பு கொள்ள இயல வில்லை எனில் இதே எண்ணுக்கு அவரது வாட்ஸ் அப் க்கு குறுந்தகவல் அனுப்பினால் தொடர்பு கொள்வார் . திரு.அகமது மின் அஞ்சல் : ahmad@ariafarms.in "உங்களது சொந்த மாடு " திட்டம் குறித்து அவரை நேரில் சந்தித்து உங்கள் வசதிக்கு தகுந்தபடி , நீங்கள் விரும்பும் பட்சத்தில் பயனடையலாம் ! நன்றி எஸ்.நரசிம்மன் . மேழிச் செல்வம்
|