இன்று ஹைதராபாத்தில் இருந்து மத்திய அரசாங்கத்தின் தேசிய நிறுவனத்தில் இருந்து வருகிறேன் என்று ஒருவர் வந்து இருந்தார். மத்திய அரசு கால்நடைகளின் GENOME SEQUENCING அதாவது அந்த திட்டத்தில் கால்நடைகளின் ரத்த மந்திரிகளின் மூலம் அவற்றின் DNA போன்றவற்றை சோதிக்கலாம் என்று ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
சிறிது நேரம் பேசிய பிறகு மத்திய அரசிடம் இருந்து பெற பட்ட அத்தாட்சி இருக்கிறதா? அல்லது இந்த திட்டம் சம்மந்தமாக அறிக்கை , அரசு நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளதா என வினவினேன்.
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அத்துடன் தங்களுடைய வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் நகல் வழங்கும் படி கேட்டு கொண்டேன்.
தமிழக அரசாங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் கால்நடை துறை, துணை செயலர் கால்நடை துறை திருப்பூர் மாவட்டம் கையொப்பம் பெற்று வாருங்கள் பின்னர் ரத்த மாதிரிகள் எடுப்பதற்கு அனுமதி தருகிறேன், என்றேன்.
உடனே அவர் நான் என்னுடன் பணி புரிபவர்களிடம் ஒப்புதல் பெற்று வருகிறேன், நான் இப்பொழுது மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசகராக மட்டுமே பணி புரிகிறேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
இந்திய நாட்டில் பாரம்பரிய கால்நடைகள் , வன விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றின் உயிருடன் மாதிரிகள் எடுப்பதற்கோ ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கோ சென்னையில் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு கழகம் என உருவாக்க பட்டு, சென்னையில் அதன் அலுவலகம் உள்ளது. NATIONAL BIODIVERSITY AUTHORITY என்று பெயர், மேலும் இதற்கு NATIONAL BIODIVERSITY ACT 2002 என்று சட்டமும் இயற்ற பட்டுள்ளது.
மேலும் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு கழகத்தின் அனுமதி இன்றி மாதிரிகள் எடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக இந்த மாதிரிகள் நாட்டை விட்டு எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. இது போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு நடுவன் அரசின் ஆராய்ச்சி மையம் CENTRE FOR SCIENCE AND MOLECULAR BIOLOGY ஹைதராபாத்தில் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் இதன் ஆராய்ச்சி அறிக்கை வழங்க மட்டுமே உரிமை உள்ளது. மாதிரிகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதற்கு பெயர் BIO PIRACY .
அலட்சியமாக விவசாயிகள் கால்நடை வைத்து இருப்போர், அதிகாரி என்று சொல்லும் யார் வேண்டுமானால் கால்நடைகளை ரத்த மாதிரிகளையோ NOSE SWAB என சொல்லக்கூடிய மூக்கில் இருந்து பெறக்கூடிய மாதிரிகளையோ எடுக்க அனுமதிக்க கூடாது.
கால்நடை வைத்து இருப்போர் இந்த தகவல்களை பகிர்ந்து பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
கார்த்திகேய சிவசேனாபதி 11-06-2018
|