|
|||||
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !! |
|||||
நல்லெண்ணெய் குளியல் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால் நம் பல பேர் வருடத்திற்கு ஒரு முறை அதுவும் தீபாவளி அன்று மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தில் முதல் நிகழ்வு கங்கா ஸ்நானம் எனப்படுகிற எண்ணெய்க் குளியல்! திருநாள் அன்று இருள் பிரியாத அதிகாலை, உடம்பு எல்லாம் எண்ணெய் வழிய, சிகைக்காய்த் தூள் வாசத்துடன், வெந்நீர்க் குளியல் போடும் சுகமே சுகம்! இது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தாலும், இதில் புதைந்திருக்கும் மருத்துவக் காரணங்கள் ஏராளம்.
நல்லெண்ணெய் குளியலின் நன்மைகள் !!

அதிகாலை குளிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை 4 மணிக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பதனால் சளித் தொந்தரவுகளோ, வேறு எந்த பிரச்னைகளோ வராது. அந்த நேரத்தில்தான் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் வராமலிருக்கும். கடவுளின் பெயரால் சொல்லி வைத்தால், தவறாமல் பின்பற்றுவார்கள் என்பதற்காகத்தான் அதிகாலை எண்ணெய்க் குளியலுக்கு ஆன்மிக காரணத்தைச் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள்'.
'தீபாவளி மட்டுமில்லை கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பது, பஜனை செய்வது, கோலம் போடுவது போன்ற சடங்குகளும், அதற்காக அதிகாலை குளியல் போடுவதும் என எல்லாமே உடல் நலத்துக்கு உகந்த விஷயங்களே! முந்தைய காலங்களில் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய்க் குளியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நல்ல உடல் நலம் கிடைக்கப் பெற்றனர்.
கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு கண் எரிந்து கிடப்பவர்கள் மற்றும் தூசு, புகை என சுற்றுப்புறச் சீர்கேட்டால் அவதிப்படும் எல்லோருக்குமே நல்லெண்ணெய் குளியல் புத்துயிர் தரும். இன்றைய இளம்தலைமுறை, தீபாவளியை முன்னிறுத்தியாவது ஒரே ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் போதும், உடல் புத்துணர்ச்சி, உள்ளத்திலும் பிரதிபலிக்க உள்ளமும் தீபமாய் சுடர்விடும்.
|
|||||
by Swathi on 23 Jun 2014 5 Comments | |||||
Tags: Oil Bath Health Tips Sesame Oil Bath Benefits | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|