|
|||||
காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் பயன்கள் |
|||||
காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் பயன்கள் காய்கறிகள்: கத்திரிக்காய்: புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. முருங்கைக்காய்: இரத்தத்தைச் சுத்திகரிக்கும் உருளைக்கிழங்கு: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காய்: எடை குறைப்பிற்கு உதவுகிறது. பீர்க்கங்காய்: கண்பார்வை குறைபாட்டைச் சரி செய்கிறது. சௌ சௌ: இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. புடலங்காய்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தக்காளி: புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. சின்ன வெங்காயம்: நோய்த் தொற்று வராமல் தடுக்கிறது. பெரிய வெங்காயம்: இரைப்பை புண்ணைக் குணப்படுத்துகிறது. அவரைக்காய்: உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. பீன்ஸ்: மன அழுத்தத்தைக் குறைத்து உறக்கத்தைக் கொடுக்கும். முட்டைக்கோஸ்: நோயெதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. பீட்ரூட்: இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவர்: ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. வாழைப்பூ: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. வாழைக்காய் மற்றும் தண்டு: சர்க்கரை நோய், சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இஞ்சி: செரிமானத்திற்கு உதவுகிறது. கொத்தவரங்காய்: சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறது. பாகற்காய்: நீரழிவு நோயைக் குணப்படுத்துகிறது. எலுமிச்சை: செரிமானத்திற்கும், பல் நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது. புதினா: இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. கொத்தமல்லி: தோல் நோயைக் குணப்படுத்தும். கறிவேப்பிலை: கண், கல்லீரல் நோயைத் தடுக்கிறது. பச்சைமிளகாய்: சருமப் பிரச்சனைகள், பருக்களைத் தடுக்கிறது. கேரட்: புற்றுநோயை தடுக்கவும், கண் நோயைத் தடுக்கவும் உதவுகிறது. கருணைக்கிழங்கு: இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சேப்பக்கிழங்கு: உடல் வெப்பத்தைத் தணிக்கப் பயன்படுகிறது. மொச்சைக்காய்: இரத்தக் கொழுப்பைக் குறைக்கிறது. மரவள்ளிக்கிழங்கு: இதயத் துடிப்பைச் சீராக வைக்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு: சருமப் பாதுகாப்பிற்குப் பயன்படுகிறது. தேங்காய்: ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. முத்துச் சோளம்: உடல் வலிமையை அதிகரிக்கிறது. காளான்: புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. பன்னீர்: பற்களையும், எலும்புகளையும் வலிமையாக்குகிறது. முளைக்கீரை: பசியைத் தூண்டி கண்களுக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. புளித்த கீரை: வயிற்றுப்புண்ணை ஆற்றுகிறது. நூல்கோல்: உடல் எடையைக் குறைக்கப் பயன்படுகிறது. மாங்காய்: கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சுரைக்காய்: உடலின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக்க உதவுகிறது. பரங்கிக்காய்: இரத்த அழுத்தத்தைச் சரிசெய்கிறது. பூசணிக்காய்: கல்லீரல், கிட்னி நோயைக் குணப்படுத்துகிறது. நெல்லிக்காய்: வாய்ப்புண், சளி தொந்தரவுகளைச் சரிசெய்கிறது. பச்சைப்பட்டாணி: வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. குடை மிளகாய்: இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது. முள்ளங்கி: இருமல், சளியைச் சரிசெய்ய உதவுகிறது. தர்பூசணி: ஆஸ்துமா பிரச்சனை உண்டாகாமல் தடுக்கிறது. பழங்கள்: ஆப்பிள்: இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. செர்ரி: நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது. பேரிக்காய்: செரிமானத்திற்கு உதவுகிறது. பேரீச்சம்பழம்: எடை அதிகரிப்பிற்கும், இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை: உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. பலாபிஞ்சு: சருமம், கண் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. சுண்டைக்காய்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. தட்டைக்காய்: பக்கவாதம் உண்டாகும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. சாத்துக்குடி: ஸ்கர்வி நோயைக் குணப்படுத்துகிறது. நாவல்பழம்: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. சப்போட்டா: கண் பார்வை பாதிப்பைத் தடுக்கிறது. பலாப்பழம்: நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. ஆரஞ்சு: பக்கவாதம் வராமல் தடுக்கிறது. அன்னாசிப்பழம்: காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. மாதுளை: இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. ஸ்ட்ராபெர்ரி: இரத்த அழுத்தத்தைச் சரிசெய்கிறது. பப்பாளி: கண், வெண் தோல் பாதிப்பைத் தடுக்கிறது. விளாம்பழம்: மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. கொய்யாப்பழம்: கண் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாம்பழம்: ஆண்மை தன்மை அதிகரிக்க உதவுகிறது. சீத்தாப்பழம்: இதயத்தைப் பலப்படுத்துகிறது. வெள்ளரிக்காய்: உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைக்கிறது. கொடுக்காப்புளி: பாலுறவு நோயைக் குணப்படுத்துகிறது. இலந்தபழம்: உடல் எடை குறைய உதவுகிறது. கோவைக்காய் மற்றும் கோவைப்பழம்: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நிலக்கடலை: ஆற்றலைக் கொடுக்கிறது. தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. முலாம்பழம்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. அத்திப்பழம்: உடல் எடையைக் குறைத்து எலும்புகளைப் பலப்படுத்துகிறது. கிவி பழம்: சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ப்ளம்ஸ்: இதயத்தைப் பலப்படுத்துகிறது. வாழைப்பழம்: சரும வெடிப்புகள் வராமல் தடுக்கிறது. |
|||||
by on 21 Nov 2020 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|