LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா

எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 11.12.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பாரதி விழா எழுச்சி மிக்கதாக விளங்கியது.

    ஈரோடு யு. ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11.12.2020 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற பாரதி விழாவிற்குப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றார்.

    விழா தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு பாரதி இறுதிப் பேருரையாற்றிய கருங்கல் பாளையம் நூலகத்திலிருந்து ஏந்திவரப்பட்ட ‘பாரதி ஜோதி’ இந்த ஆண்டின் பாரதிவிருதாளர் இசைக்கவி ரமணன் அவர்களிடம் வழங்கப்பட்டது. விருதாளர் பள்ளி நுழைவாயிலிருந்து ஜோதியை ஏந்தியவாறு விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

    நிகழ்வில் இசைமேதை எம்.பி.சீனிவாசன் அவர்களின் திருவுருவப்படத்தை அவர் தொடங்கிய சென்னை இளைஞர் இசைக்குழுவின் கலைத்துறை இயக்குநர் டி.ராமச்சந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார்.

    2020ம் ஆண்டிற்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருதையும் பொற்கிழித் தொகை மூ. 25,000ஐயும் இந்த ஆண்டின் பாரதி விருதாளர் இசைக்கவி ரமணன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் அவர்கள் வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார்.

    விருதாளர் இசைக்கவி ரமணன் அவர்கள் ஏற்புரையுடன் இலக்கியச் சொற்பொழிவினையும் நிகழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் கொரோனாத் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கறாராகப் பின்பற்றப்பட்டன. அழைப்பிதழில் நிகழ்விடம் அறிவிக்கப்படவில்லை. பேரவையின் மாநில நிர்வாகிகள், மற்றும் சில பிரமுகர்கள் என 50, 60 பேர் மட்டும் அரங்கத்தில் பார்வையாளர்களாக அமர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களும் அரங்கத்திற்குள் நுழைகிறபோது டெம்பரேச்சர் பரிசோதனை செய்யப்பட்டதோடு சானிடைசர் கொடுக்கப்பட்டு முறையான தனிமனித இடைவெளியுடன் அரங்கத்திற்குள் அமரவைக்கப்பட்டனர். பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணியுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

    உலக அளவிலான தமிழ் அன்பர்கள் இந்நிகழ்வை இணையவழியாகப் பார்த்துப் பயன்படத்தக்க முறையில் விரிவான தொழில் நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக பேரவையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். நிறைவாகப் பொருளாளர் க. அழகன் நன்றியுரையாற்றினார்.

by Lakshmi G   on 27 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார் கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார்
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.