|
||||||||
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் |
||||||||
தோற்றம் - 4 ஜனவரி 1954
*************
மறைவு - 15 ஜனவரி 2018
*************
பிறந்த ஊர் - செங்கல்பட்டு
*************
மாவட்டம் - செங்கல்பட்டு (தமிழ்நாடு - இந்தியா)
*************
அப்பா வேம்பு சாமி, சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது.
*************
பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
*************
1973-74-ல் இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார்.
*************
தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.
*************
கட்டுரைத் தொகுப்புகள்
*************
பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், கேள்விகள் மனிதன் பதில்கள், நெருப்பு மலர்கள், பேய் அரசு செய்தால், அயோக்கியர்களும் முட்டாள்களும், கேள்விக் குறியாகும் அரசியல், அறிந்தும் அறியாமலும், ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்), என் வாழ்க்கை என் கையில், ஆப்பிள் தேசம்.
*************
நாடகங்கள் - புதினங்கள்
*************
பலூன், வட்டம், எண் மகன், விசாரணை, சண்டைக்காரிகள் என்ற புதினத்தையும், அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை மற்றும் அய்யா மற்றும் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதில் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
*******************
மறைவு
*********************
சிறுநீரகப் பிரச்சினைக்குச் சிகிச்சைபெற்று வந்த ஞாநி 2018ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சென்னை கே.கே. நகரில் உள்ள வீட்டில் தனது 64 ஆவது வயதில் காலமானார்.
*******************
ஞாநியின் மரணம் தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகை உலகுக்குப் பெரும் இழப்பு எனப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தோற்றம் - 4 ஜனவரி 1954 மறைவு - 15 ஜனவரி 2018 பிறந்த ஊர் - செங்கல்பட்டு மாவட்டம் - செங்கல்பட்டு (தமிழ்நாடு - இந்தியா) அப்பா வேம்பு சாமி, சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார். 1973-74-ல் இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார். தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். கட்டுரைத் தொகுப்புகள் பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், கேள்விகள் மனிதன் பதில்கள், நெருப்பு மலர்கள், பேய் அரசு செய்தால், அயோக்கியர்களும் முட்டாள்களும், கேள்விக் குறியாகும் அரசியல், அறிந்தும் அறியாமலும், ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்), என் வாழ்க்கை என் கையில், ஆப்பிள் தேசம். நாடகங்கள் - புதினங்கள் பலூன், வட்டம், எண் மகன், விசாரணை, சண்டைக்காரிகள் என்ற புதினத்தையும், அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை மற்றும் அய்யா மற்றும் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதில் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மறைவு சிறுநீரகப் பிரச்சினைக்குச் சிகிச்சைபெற்று வந்த ஞாநி 2018ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சென்னை கே.கே. நகரில் உள்ள வீட்டில் தனது 64 ஆவது வயதில் காலமானார். ஞாநியின் மரணம் தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகை உலகுக்குப் பெரும் இழப்பு எனப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
||||||||
by Kumar on 12 Jan 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|