LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.​ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.

அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம் சேவகர் ஆகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையிலிருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக​. தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும், துணிநூல் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பாஜக தேசியச் செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரிக் காலத்தில் மேசை வரிப்பந்தாட்டத்தில் வாகையராகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். துடுப்பாட்டம் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலை​வர் தேர்தலுக்கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோசனைக் கூட்​டம் டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் மோடி, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் பாஜக ஆட்​சிமன்​றக் குழு கூட்​டம் ஞாயிற்றுக்கிழமை நடை​பெற்​றது. பிரதமர் இல்​லத்தில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் பாஜக தேசிய தலை​வர் ஜே.பி.நட்​டா, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்​டத்​துக்கு பிறகு, ‘குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாள​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார்.
குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. 21-ம் தேதிக்​குள் மனுக்​களை தாக்​கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்​புமனுவை தாக்​கல் செய்​வார் என்று கூறப்​படு​கிறது.

தற்​போது மக்​களவை​யில் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர்​.மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களின்​. ஆதரவு தேவை. இதன்​படி, 391 நாடாளுமன்ற உறுப்பினர்களின்​ ஆதரவைப் பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார்.

நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும், எதிர்க்​கட்​சிகளின் இந்தியா கூட்டணிக்கு 312 நாடாளுமன்ற உறுப்பினர்களும்​ உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்தக் கூட்டணியின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

 

 

by hemavathi   on 17 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார்
மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல்  பவுடர்  - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல் பவுடர் - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.