|
||||||||
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் |
||||||||
![]()
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்பமை முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் ஆகஸ்ட் 27ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ள இலட்சுமணண் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளரும்கூட.
பொது இடங்களில் புகைத்தலுக்கு எதிரான தீர்ப்பு,முல்லைப்பெரியாறு அணை நடுவு நிலை உள்ளிட்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். 15000க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியவர். உலகத்தமிழ் பொருளாதார மாநாடு, சென்னை வளர்ச்சி மன்றம் ஆகியவற்றுக்குத் துணை நின்றவர். மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்றவர்
சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நீதிக்கட்சியின் சாதனைகள் குறித்த அற்புதமான சொற்பொழிவினை நிகழ்த்தினார். ஓய்வறியாது சுறுசுறுப்பாகப் பணியாற்றினார்.
இலட்சுமணனின் இழப்பு சட்ட உலகிற்கு மட்டுமல்லாமல் தமிழ்கூறு நல்லுலகிற்கும் பேரிழப்பு
|
||||||||
by hemavathi on 29 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|