LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழர்கள் வெளிநாட்டு பொறுப்புகள் -International positions

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை  உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
தமிழகத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. இவருக்குத் தற்போது 53 வயதாகிறது.  இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்குத் தனது திறனை வளர்த்துக் கொண்டார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகக்  கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார்.
சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவனப் பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-ல் இருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது.
அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆல்பபெட் நிறுவனர்களான லாரி பேஜ் 171.2 பில்லியன் டாலர், செர்ஜி பிரின் 160.4 பில்லியன் டாலர் நிகரச் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் ஏழு பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளனர்.

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை  உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. இவருக்குத் தற்போது 53 வயதாகிறது.  இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்குத் தனது திறனை வளர்த்துக் கொண்டார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகக்  கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார்.சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவனப் பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-ல் இருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது.

அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்பபெட் நிறுவனர்களான லாரி பேஜ் 171.2 பில்லியன் டாலர், செர்ஜி பிரின் 160.4 பில்லியன் டாலர் நிகரச் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் ஏழு பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளனர்.

by hemavathi   on 27 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார் கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார்
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.