LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழறிஞர்கள்-இலக்கியப் பங்களிப்புகள்

கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார்

மரியாதைக்குரிய மாமனிதர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியின் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்

யாரிந்த சி.கோவிந்தராசனார்?

கண்ணகி-கோவலன்-மாதவி-பாண்டியன் பற்றிய தமிழ்ப் பெருங்காப்பியம். கண்ணகி எனும் கற்புக்கரசியின் வரலாற்றை முழுக்க முழுக்க வரையறுத்த நூல். அப்படிப்பட்ட சிலப்பதிகாரத்தை, ஒரு கற்பனைக்கு இளங்கோவடிகள் ஏதோ எழுதிட்டாரு...உண்மையா அதுல இருக்க பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், கண்ணகி கோயில் இதெல்லாம் இருக்கா என்ன..? என்றனர் சிலர்.

இந்தக்கேள்விகள் அய்யா கோவிந்தராசனை மிகவும் குடைந்தது. "நம்ம தமிழ் பெருமையை நம்ம மக்களே சந்தேகப்படுறாங்களே..?" என்று மனம் உடைந்தார். ஆனால் உடைந்ததோடு உட்காரவில்லை. வெகுண்டு எழுந்தார்.!!

"நான் கண்டுபிடிக்கிறேன் எல்லாவற்றையும்..! நான் உணர்த்துகிறேன் மக்களுக்கு சிலப்பதிகாரம் கதையல்ல, நடந்த விஷயம் என்று..! கண்ணகி என்பவள் உயிரோடு இருந்தாள் என்று..!"

சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்றவர், சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரி்ன் மனதில் நீண்ட நாட்களாகவே ஒர் ஆசை,ஏக்கம்,கனவு.சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன..? நாம் கண்டுபிடிப்போம் என்ற தணியாத தாகத்தில் எண்ணி துணிந்து இறங்கினார்.

1945 ஆம் ஆண்டு கண்ணகி பயணித்த பாதை வழியாகவே இவரும் நடந்தே சென்றார்.தன் ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார்.பின் தன் உடமைகள் ஒவ்வொன்றையும் வி்ற்று விற்று காசாக்கிக் கொண்டே 17 ஆண்டுகள் நடந்து முடிவில் சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும்,மணல் மேடுகளும்,கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும்,சவுக்கு தோப்புகளும்,புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று,அன்று அழைக்கப்பட்ட பகுதியே,பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அளிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே,காவேரிப் பூம்பட்டிணம் கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

1945 ஆம் ஆண்டு பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு,கால் நடையாக ஆராய்ந்து,ஆராய்ந்து, நடந்து,நடந்து,மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி,சேரநாடு நோக்கிச் சென்ற வழியில்,இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கினார்.
1945 ஆம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.

அவரது இவ்வளவு பெரிய சாதனையை அப்படி அரசாங்கமும் மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்?
ஒரு பேட்டியில் அதை அவரே விளக்குகிறார்-

’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’

கண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’

அது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்?
’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.

இவ்வளவு வருடம் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒரு பொக்கிஷத்தை அரசுக்கு கொடுத்துவிட்டு அவர் சொன்ன வார்த்தைகள்,
"தமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வேண்டும் என்பதற்காக அல்ல...அது தேவையுமில்லை..2012 இல் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருதுனு ஏதோ ஒன்னு கொடுத்தார்..ஆனால் எது என் நோக்கம் அல்ல...நம் மக்கள் ஒரு பேருண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கம்..!"

குறிப்பு:
இப்போது நாம் செய்ய வேண்டியது, முடிந்த அளவு நம் தொன்மையான இலக்கியங்களைப் பற்றியும், தமிழ் கூறும் தற்கால நல்லுலகுக்கு அவை கொடுக்கும் அறிவுரை பற்றியும், இவற்றை எழுதியோர் மட்டுமில்லாது, பரப்பச் செய்தோர் பற்றியும் அடுத்த தலைமுறைக்கு...
உங்களுக்கே தெரியும்.🙏
--------------------
Writer Charithraa's

by Swathi   on 16 Oct 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.