|
||||||||
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி |
||||||||
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி அவர்களுக்கு எமது புகழஞ்சலி.. 'வையத்தலைமை கொள்' என்ற வலைத்தமிழ் நிகழ்ச்சியில் பெண் பேராளுமையாக ஆவணப்படுத்தச் சிலமுறை பேசியுள்ளேன். நேரில் சந்தித்து உரையாட விரும்பிய ஆளுமை..
தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கல்விக் குரலாகவும், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பல்வேறு சமூக அவலங்கள் குறித்தும் ஒலித்துக் கொண்டிருந்த முதுபெரும் கல்வியாளர், பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி அவர்கள் காலமானார்.
இவரின் பணிகளும் வகித்த பதவிகளும்:
* தமிழ் நாட்டின் கல்லூரிகளில் துணைப்பேராசிரியர், பேராசிரியர் துறைத்தலைவர் (1960-1988)
* முதல்வர், அரசு மகளிர் கல்லூரி குடந்தை (1988-1990)
* இந்தியச் சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் (1990-92)
* துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (1992-98)
* தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் செப்டம்பர் 2001-ஜூலை 2002)
* தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் (2002-2005)
"நம் சமூகப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்" என்ற முழக்கத்தையே தம் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார்.
1980களின் இறுதியில், உசிலம்பட்டி பகுதியில் நிகழும் பெண் சிசுக்கொலைகளைக் களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தியுள்ளார்.
பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது எதிர்ப்புகள் இருக்கும். தைரியம் வேண்டும். தார்மீகப் பொறுப்போடு பதவியை, இடத்தை அணுகவேண்டும். ஆணோ, பெண்ணோ, பொறுப்புக்குரிய அடிப்படை சிந்தனைத் தெளிவு இருந்தால் அதுவே உங்களை இயக்கும். அதுவே உங்கள் பாதையை அமைக்கும். மனிதநேய அணுகுமுறையும், முறைகேடுகளைத் தவிர்ப்பதும் கட்டாயம் என்பது இவர் காட்டும் வழி.
வசந்தி தேவி பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டு அதிலேயே தன் வாழ்நாளின் முக்கியமான தருணங்களைச் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக 1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கி இந்திய அரசு பெருமை செய்தது..
சமூக மாற்றத்தையே மூச்சாகக் கொண்டு இயங்கிய அம்மையாருக்கு எமது புகழஞ்சலி!!
அவரது நேர்காணலைக் காண: https://www.youtube.com/watch?v=-hiL2s9mt_4&list=PLXPD1_to_UjQ6xegW5ulSJ8YUkaz3yyu3&index=8
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
|
||||||||
| by hemavathi on 01 Aug 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|