LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    குழந்தை மருத்துவம் Print Friendly and PDF
- நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance)

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் !

எடை குறைவாகப் பிறத்தல் நன்கு ஆரோக்கியமான கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது.

 

பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்டகுழந்தைகள் என உலகளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. அக்குழந்தை கர்ப்பகாலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம். குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன் அதாவது 37 வார கர்ப்பத்தின் போதே குழந்தை பிறப்பதாகும். கர்ப்பத்தில் இக்குழந்தைகளின் வளர்ச்சி நன்கு இருக்கலாம்-அதாவது உடல் எடை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக எந்தவித பாதிப்பின்றியும் இருக்கலாம்.

 

     பிறந்த 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சரியான பராமரிப்பு அளிப்பதன் மூலம்குழந்தை தேவையான வளர்ச்சி அடையும் குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)குறித்த காலத்தில் பிறந்தாலும் அளவில் சிறியதாக காணப்படுதல். குறித்த காலம் முடிவுற்ற பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குழந்தைபிறக்கலாம். அவைகளின் எடை மிகக் குறைந்து காணப்படும். அவற்றின் எடை கருவளர்ச்சியினைப் பொறுத்து அமைகிறது. எடை குறைவாக பிறப்பதர்கான காரணங்கள் ? கருவிலிருக்கும் குழந்தைக்கும், நஞ்சுக் கொடிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகள், தாய்க்கு சத்துப் பற்றாக்குறை, இரத்தக் குறைவு, மிக இளம் வயதில் கர்ப்பமாகும் தாய், பல முறை தாய்மை அடைதல், தாய்க்கு மலேரியா நோய் ஏற்படுதல் போன்றவை ஆகும். குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதைத் தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.

 

     குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும் கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துகளை இனங்கண்டறிய வேண்டும். கர்ப்ப காலத்தின் போது, மற்றகாலங்களை விட சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக் காலம், அதற்குத் தேவையான கருத்தடை முறைகளைச் செய்ய வேண்டும். பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தப் படவேண்டும்.

 

     ஊட்டச்சத்து க்குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும். குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும். 5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும். பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.

 

     கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும். சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்றும் தன்மை கொண்ட நோய்கள் பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும். விபத்துக்கள் மற்றும் விஷப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் இவை வீடு, சாலைகள் மற்றும் பள்ளிகளில் சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியவை. தீக்காயங்கள், காயங்கள், தண்ணீரில் முழ்கிவிடுதல், விஷப்பொருட்களை உட்கொள்ளுதல், கீழே விழுந்து காயமடைதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன. குழந்தை நலன் பராமரிப்பு குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தைகருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.

 

     ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாதகுழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது. குழந்தை பராமரிப்பின் நோக்கம் கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவது அவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா. ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா. நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா. தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும்குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா. வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது. குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும்.

 

     இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணமுடிகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது. குழந்தையின் வளர்ச்சி குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம். சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்டகுழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.  எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம்குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும்.

 

     ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது.குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லதுகுழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது. உயரம்-உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும். தலை மற்றும் மார்பின் சுற்றளவு- குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும்.குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு-குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும்.

 

     நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும்குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு எடை குறைவாகப் பிறத்தல்நன்கு ஆரோக்கியமான கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்டகுழந்தைகள் என உலகளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. அக்குழந்தை கர்ப்பகாலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம்.

 

குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்

 

     குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள்கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன் அதாவது 37 வார கர்ப்பத்தின் போதே குழந்தை பிறப்பதாகும். கர்ப்பத்தில் இக்குழந்தைகளின் வளர்ச்சி நன்கு இருக்கலாம்-அதாவது உடல் எடை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக எந்தவித பாதிப்பின்றியும் இருக்கலாம். பிறந்த 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சரியான பராமரிப்பு அளிப்பதன் மூலம்குழந்தை தேவையான வளர்ச்சி அடையும்குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)http://www.youtube.com/watch?v=O76A_z2xpn8குறித்த காலத்தில் பிறந்தாலும் அளவில் சிறியதாக காணப்படுதல்.குறித்த காலம் முடிவுற்ற பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குழந்தைபிறக்கலாம். அவைகளின் எடை மிகக் குறைந்து காணப்படும்.

 

     அவற்றின் எடை கருவளர்ச்சியினைப் பொறுத்து அமைகிறது.எடை குறைவாக பிறப்பதர்கான காரணங்கள் ?கருவிலிருக்கும் குழந்தைக்கும், நஞ்சுக் கொடிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகள், தாய்க்கு சத்துப் பற்றாக்குறை, இரத்தக் குறைவு, மிக இளம் வயதில் கர்ப்பமாகும் தாய், பல முறை தாய்மை அடைதல், தாய்க்கு மலேரியா நோய் ஏற்படுதல் போன்றவை ஆகும்.குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதைத் தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும்கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துகளை இனங்கண்டறிய வேண்டும்.கர்ப்ப காலத்தின் போது, மற்றகாலங்களை விட சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

 

     புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக் காலம், அதற்குத் தேவையான கருத்தடை முறைகளைச் செய்ய வேண்டும்.பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தப் படவேண்டும்.ஊட்டச்சத்து க்குறைபாடுஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

 

     சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.தொற்றும் தன்மை கொண்ட நோய்கள்பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும்.விபத்துக்கள் மற்றும் விஷப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள்இவை வீடு, சாலைகள் மற்றும் பள்ளிகளில் சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியவை. தீக்காயங்கள், காயங்கள், தண்ணீரில் முழ்கிவிடுதல், விஷப்பொருட்களை உட்கொள்ளுதல், கீழே விழுந்து காயமடைதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன.

 

     குழந்தை நலன் பராமரிப்புகுழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தைகருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாதகுழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது.குழந்தை பராமரிப்பின் நோக்கம் கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.

 

     ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவதுஅவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா.ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா.நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா.தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும்குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா.வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது.

 

     குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணமுடிகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது.

 

குழந்தையின் வளர்ச்சி :

     குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்டகுழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும். எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை.

 

     மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம்குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது.குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது.

 

     உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லதுகுழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.உயரம்-உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.தலை மற்றும் மார்பின் சுற்றளவு- குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும்.குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

 

     நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு-குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும்குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

by Swathi   on 02 Jul 2014  6 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
ஆட்டிசத்தை குணமாக்க மருந்துகள் இல்லை ஆட்டிசத்தை குணமாக்க மருந்துகள் இல்லை
குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்
குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர் குழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா? ஹீலர் பாஸ்கர்
பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா? பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?
பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !! பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் !!
குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர் குழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்
உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க ! உங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க !
குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம் குழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு? ஆயுர்வேத மருத்துவம்
கருத்துகள்
15-May-2020 16:13:00 Kanagaraj said : Report Abuse
Kulanthigal udal kulirchiya erukkalama?
 
15-Oct-2019 15:32:09 அருள் இன்னாசி said : Report Abuse
எனது குழந்தைக்கு 4 மாதம் நடபெறுகிறது. அவனுக்கு தலையில் சாதரணமான வெப்ப நிலை காலத்தில் கூட அதிகமாக வியர்வை வருகிறது எதனால்? இதனால் பாதிப்பு ஏற்படுமா? அதற்கு தீர்வு என்ன? தயவுசெய்து கூறுங்கள்... நன்றி
 
30-Jan-2018 03:05:38 வைரவேல் said : Report Abuse
என் 2 மாத குழந்தையின் இடது கையில் கிச்சுக்கு அருகில் நெறி கட்டி போல் தோன்றி உள்ளது, isoniazed கொடுக்கலாமா?
 
14-Oct-2016 12:29:24 Sangeetha yuvaraj said : Report Abuse
This programme is very useful to me , Thankfully sangeetha yuvaraj
 
06-Jan-2016 03:12:32 kalaiselvi said : Report Abuse
This programe very interesting
 
21-Mar-2015 23:20:51 ராஜ் kumar said : Report Abuse
3 மாத பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னும் இருமல் தொடர்ந்து வர காரணங்கள் என்ன?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.