|
||||||||
இலவங்க பட்டையின்(cinnamon) சிறப்பான மருத்துவ குணங்கள் !! |
||||||||
சின்னமான் என்றழைக்கப்படும் இலவங்கப் பட்டை நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மசாலா பொருளாகும். இலவங்க பட்டையின் பயன்கள் சமீப காலமாக ஆராய்ச்சியாளர்களையே பிரமிக்க வைத்து தற்பொழுது உலகெங்கும் பிரபலமாகி வருகின்றன. இலவங்க பட்டையின் மருத்துவ குணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவற்றை அறிந்தால் நீங்களும் இதனை அதிசய மூலிகை என்று ஒத்துக்கொள்வீர்கள். மூட்டு வலிக்கு சிறந்த மருந்து : இலவங்க பட்டை மூட்டுவலியில் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. இது காலை எழுந்தவுடன் மூட்டுவலியில் இருக்கக் கூடிய மூட்டு இறுக்கத்தை போக்குகிறது. மூட்டுக்களை எளிதாக இயங்கச் செய்கிறது. சுமார் 90% மூட்டுவலியை போக்கும் திறன் கொண்டது இது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுநீர் கோளாறு தீர : சிறுநீர் கோளாறுகளுக்கு இலவங்க பட்டை ஒரு சிறந்த மருந்து என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை தினசரி உட்கொள்ளும் பொழுது சிறுநீரகங்கள் சீராக இயங்குகின்றன. சிறுநீர் பிரிவது இயல்பாக நடைபெறுகிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்படக் கூடிய நுண்ணுயிர் தொற்றுக்களையும் இது எதிர்த்து முறியடிக்கின்றது. ஆரோக்கியம் கொழிக்கும் : சின்னமான் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த இலவங்க மரப்பட்டை ஹிந்தியில் தால்ச்சினி என அழைக்கப்படுகின்றது. இது பொதுவாக நாம் பிரியாணி போன்ற உணவு வகைகளில் உபயோகிப்பதே ஆகும். இந்த மரப்பட்டைகளை நாம் நேரடியாக உண்ணும் பொழுது அதிசயிக்கத்தக்க ஆரோக்கியத்தை தருகிறது. நீரிழிவு உள்ளவர்கள் இதனை அப்படியே உட்கொள்ளலாம். மற்றவர்கள் தேனுடன் உட்கொள்ள வேண்டும். கெட்ட கொழுப்புகளை குறைக்கும் : தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதில், இலவங்க பட்டை சிறப்பாக செயல்படுகிறது. இலவங்க பட்டை உட்கொண்ட 2 மணி நேரத்திற்குள் சுமார் 20% கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றது. இந்த சின்னமானை கிரீன் டீயுடன் சேர்த்து உட்கொள்ளும் பொழுது 100% பயனளிக்கின்றது. வாய் துர்நாற்றம் நீங்க : வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். செரிமான சக்தியைத் தூண்ட : எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். இருமல், இரைப்பு : சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும். விஷக்கடிக்கு : சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் : சின்னமான் டைப் 2 நீரிழிவில் சர்க்கரையின் அளவை சிறப்பாக குறைக்கின்றது. இன்சுலீன் தடுப்பாற்றலை போக்குகின்றது. இன்சுலீனை உடல் எளிதாக கிரஹித்து உபயோகிக்க பயனாகின்றது. இயற்கையான இன்சுலீன் உற்பத்தியையும் தூண்டுகின்றது. வயிற்று உபாதைகளை நீக்கும் : இலவங்க பட்டை வயிற்று உபாதைகளை நீக்கக் கூடியது. முடி உதிர்வதை தவிர்க்கக் கூடியது. இதய நோய்க்கு சிறந்தது :
இதய நோய்களுக்கு உகந்தது. சளி, இருமல் போன்ற நாட்பட்ட சுவாச மண்டலக் கோளாறுகளுக்கு உபயோகமாகின்றது. நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டுகின்றது. ஜீரண சக்தியை சீராக்குகின்றது. வாய் துர்நாற்றத்தை போக்குகின்றது. உடல் எடையை கட்டுபடுத்துகின்றது. சக்தி இழப்பை கட்டுப்படுத்துகின்றது. பசியை தூண்டுகின்றது. |
||||||||
by Swathi on 05 Jun 2014 23 Comments | ||||||||
Tags: Lavanga Pattai Cinnamon இலவங்க பட்டை | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|