|
|||||
இலங்கை அகதிகள் குடியுரிமை : மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் !!! |
|||||
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக பி.அருள்மொழிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1983-ம் ஆண்டு, இந்திய நாடாளமன்றம், சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை கடந்த 2005 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய ‘சக்காஷ்’ என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, இந்திய அரசு குடியுரிமை வழங்கியது.
தமிழகத்தில், சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் முகாம்களிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசோ, மாநில அரசோ இன்னும் குடியுரிமை வழங்கவில்லை. ஒரு மனிதனின் ஆயுட்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கும், மனித தன்மைக்கும் எதிரானது. எனவே தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக வருகிற நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். |
|||||
by Swathi on 09 Oct 2013 0 Comments | |||||
Tags: இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை உச்ச நீதிமன்றம் மத்திய அரசு | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|