|
|||||
நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்! |
|||||
நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான லைசென்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வேறுவேறுவிதமான லைசன்ஸுகளுக்கு பதிலாக ஒரே மாதிரியான லைசன்ஸ் கொடுக்கப்படும். இதை வழங்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையும் கடைபிடிக்கப்படும். இது குறித்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது: நாடுமுழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றது. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த லைசென்ஸ் ஏடிஎம் கார்டைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் க்யூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர். |
|||||
by Mani Bharathi on 16 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|