LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!

வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:

”எட்டு அம்சங்களில் ஒருவர் வெற்றிபெறவேண்டும்” என அமெரிக்க வெற்றிச் சிந்தனையாளர் டேரன் ஹார்டி (Darren Hardy) கூறுகிறார் என சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இவர் அமெரிக்காவிலிருந்து வெகு நீண்டகாலமாக வெளிவரும்”Success” என்ற ஆங்கில மாத இதழின் பதிப்பாளராக விளங்குகிறார். தமது 20 வயதிலேயே கோடீசுவரராக ஆனதுடன்; பிறரது வெற்றிக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் ஒரு அதிசய மனிதர் இவர்.

இவர் பதிப்பித்திருக்கும் இரண்டு புத்தகங்களை அண்மையில் படித்தேன். நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய அப்புத்தகங்கள்

1). Having your best year ever

2). The compound effect

 

இவரின் நெறிப்படுத்தலில் இயங்கும் கீழேகுறிப்பிட்ட இணைய தளங்கள் சென்று பாருங்கள்

http://www.success.com/

http://www.darrenhardy.com/

இவ்விணைய தளங்களில் மிகச்சிறப்பான கட்டுரைகளை படிக்கமுடியும். மேலும் இலவச செய்திமடல்கள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிகோலமுடியும்.

இவர் ஒரு மூன்றாம் தலைமுறை வெற்றிச்சிந்தனையாளர்.

Earl Shoaff என்பவரின் மாணவரான Jim Rohn என்பவரின் மாணவரே Darren Hardy. இவர்கள் மூவரது சிந்தனைகளையும் ஓரளவு நான் அறிந்திருக்கிறேன். Darren Hardy தனது குருநாதரையும், குருநாதரின் குருநாதரையும் விஞ்சிநிற்கிறார் -என்பது என் கருத்து. இருப்பினும் அவர் தனது குருநாதரை புகழ்ந்து பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் குரு, Jim Rohn, அண்மையில் மறைந்துவிட்டார். Jim Rohn கூட, தனது குருநாதர் Earl Shoaff ஐ வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் தனது பயிற்சி முகாம்களில் புகழுவதற்குத் தவறியதில்லை.

எனவே நீங்கள் Darren Hardy புத்தகங்களையோ, கட்டுரைகளையோ படிக்கும்போது, அதனில் தொய்ந்துகிடக்கும் கருத்துக்கள் மூன்று தலைமுறைகளாக செயலாக்கம் படுத்தப்பட்டவை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

 

நாம் வெற்றி பெறவேண்டிய எட்டு அம்சங்களாக Darren Hardy சொன்னவை எவை என்று பார்ப்போம்.

1). உங்கள் உடல் நலம்

2). உங்கள் மன நலம்

3). உங்கள் ஆன்மீக நலம்

4). உங்கள் குடும்பம்

5). உங்கள் பொருளாதாரம்

6). உங்கள் வாழ்வாதாரப்பணி

7). உங்கள் நட்பும், சுற்றமும், மற்ற தொடர்புகளும்

8). உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறை (pleasant life style)

இந்த எட்டு அம்சங்களில் ஒன்றில்கூட குறை இன்றி அனைத்திலுமே வெற்றி பெற முயலவேண்டும். அதுவே சரியான வெற்றி (Balanced success) எனவும் Darren சொல்லுகிறார்.

மேலெழுந்தவாரியாகப்படித்தாலே இவைபற்றியும், இவற்றில் வெற்றிபெறவேண்டிய அவசியத்தையும் உணரமுடியும். ஆனால் நமக்குத் தெரிந்த எவ்வளவோ பேர், மேற்சொன்ன ஒன்றிரண்டில் மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டு மற்றவற்றில் கோட்டைவிட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

எனவே இலக்குகளை நிர்ணயிக்கும்போதும், இலக்குகளை அடையும்போதும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாயினும்; இந்த எட்டு அம்சங்களில் நமது வெற்றி எந்த அளவில் இருக்கிறது என்பதை மீள்பார்வை பார்க்கவேண்டும் என்கிறார் Darren Hardy.

”வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்” என்ற தலைப்பில் இது எனது நான்காவது கட்டுரை. இதுவரை நீங்கள் படித்ததில் உங்கள் கருத்துக்களை ”வலைத்தமிழ்” தளத்தில் எனது கட்டுரைக்கு கீழே பகிர்ந்துகொள்ளுங்கள். குறிப்பாக Darren Hardy புத்தகங்களை நீங்கள் படிப்பதாக இருந்தாலோ; அவர் சொல்லிய செயல்முறைகளை கடைப்பிடிப்பதாக இருந்தாலோ எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

எனது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருவதில் சில வாரங்கள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இனி ஒவ்வொருவாரமும், சனியன்று, தவறாமல், எனது கட்டுரை வெளிவரும்.  அதனைப் படித்துவிட்டு நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, ஒவ்வொரு வாரமும் நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். இதுபோன்ற கட்டுரைகளில் ஆர்வம்கொண்ட உங்கள் நண்பர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அடுத்த வாரம் இந்த எட்டு அம்சங்களைப்பற்றி சற்று சிந்திப்போம். அதன்பின் நான் முன்பே குறிப்பிட்ட “வெற்றியாளர்களுக்கே உரித்தான 7 குணங்களைப்பற்றியும் அலசத் துவங்குவோம். அந்த 7 குணங்களையும் முழுதும் உணர்ந்து, உள்வாங்கி, கடைப்பிடித்து வாழ்ந்தால் - எடுத்துக்கொண்ட எதனிலும் நிச்சயம் வெற்றிபெறமுடியும்.

அடுத்தவாரம் சந்திப்போம்….

by Swathi   on 24 Oct 2015  3 Comments
Tags: Dr Arasu Chellaiah   Dr Arasu Chellaiah Thodar   Vetri Pathai   Vetri Pathai Thodar   வெற்றிப்பாதை   வெற்றி   அம்சங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
வெற்றி உன் கையில் வெற்றி உன் கையில்
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !! வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!  - அறிமுகம் .. வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - அறிமுகம் ..
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !! விவசாயிகளின் துன்பத்தை புரிந்ததால் தான் கத்தி படத்தில் நடித்தேன் : சொல்கிறார் விஜய் !!
காப்பியடிப்பதால் வெற்றி வருமா?! காப்பியடிப்பதால் வெற்றி வருமா?!
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா?  அது பயன்தருமா? ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா?
கருத்துகள்
02-Jan-2018 12:07:46 கி.MUNUSAMY said : Report Abuse
ஹாய், அருமை, ஆசிரியருக்கு நன்றி, 8 அம்சங்களை வாழ்வில் கடைபிடித்து நடக்க விரும்புகிறேன்.
 
22-Feb-2017 04:20:29 brakatheswari said : Report Abuse
மிகவும் நன்றாக உள்ளது.
 
15-Feb-2016 03:58:37 shahi said : Report Abuse
I try my level best
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.