புகழ்பெற்ற மதுபானங்களான அப்சல்யூட் வோட்கா, ஷிவாஸ் ரீகல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் பெர்னோ ரிக்கா.
இவரது பொருட்களின் இந்திய விற்பனை 2011-12ஆம் ஆண்டுகளில் 2010-2011 ஆம் ஆண்டை விட 34 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதன் மதிப்பு ரூ 5,491 கோடி. இதில் நிகர லாபம் மட்டும் ரூ 593 கோடியைத் தாண்டியது.
இந்தியா பெர்னோ ரிக்காவிற்கு அதிக லாபம் தேடித் தரும் நான்காவது நாடாகவும், உலக அளவில் ஐந்தாவது பெரிய சந்தையாகவும், மாறியிருக்கிறது.
விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான யுனைட்டைட் ஸ்பிரிட் நிறுவனம் அதே 2011-2012 ஆண்டுகளில் ரூ 7,763 கோடிக்கு விற்பனை செய்து ரூ 343 கோடி மட்டுமே லாபம் பார்த்திருக்கிறது.
பன்னாட்டுக் கம்பெனிகளின் நவீனமான மேம்படுத்தப்பட்ட சந்தை வியாபார உத்திகளின் மூலமாக உயர்தரமான பொருட்கள் சந்தைக்கு வரும் போது இந்திய நுகர்வோர்களும்கூட மல்லையா போன்ற உள்நாட்டு வியாபாரிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்’ என்பது இந்திய முதலாளிகள் புரிந்து கொள்ளவேண்டிய விசயம்.
|