LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!

வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3

வெற்றியாளர்களின் தனிக் குணங்களா?– என்ன தான் அவை?

 

எடுத்துக் கொண்ட இலக்குகளில் மிகப்பெரும் வெற்றி பெறும் சிலருக்கும், மிகப்பெரும்பான்மையான மற்றவர்களுக்கும் அப்படி என்னதான் வேறுபாடுகள்? என்ன தான் வெற்றியாளர்களின் தனிக்குணங்கள்? அக்குணங்களை முழுதும் உணர்ந்து படிப்படியாக அவற்றை தம் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களும் வெற்றியாளர்களாக ஆக முடியுமா? இக்கேள்விகளுக்கெல்லாம் உறுதியாக “ஆம்” என்கிறார், ப்ரையன்ட்ரேசி (Brian Tracy).மிக மிக எளிமையாக தன் வாழ்க்கையை துவங்கிய இவர், இலக்கின்றி இளமையில் அலைக்கழிந்து, வெற்றியாளர்களின் பாடங்களை உள் வாங்கி கடைப்பிடித்து மிகப்பெரும் வெற்றியாளரானார். தன் முனைப்பு, வெற்றிச்சிந்தனைகளைப் பற்றி பல புத்தகங்களை வெளியிட்ட இவர் மிகச்சிறந்த பேச்சாளரும் ஆவார்.

 

சுமார் 40 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளின் வெற்றியாளர்களைப் பற்றி சிந்தித்து, சுமார் 20 ஆண்டுகளாக வெற்றி இலக்கியங்களை தொடர்ந்து படித்து நான் கற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் தனிக்குணங்கள் இவை தான்:

1)   நிலை குலையா மனநிலை

2)   சுயமரியாதை, தன்னால் இயலும் என்ற நம்பிக்கை

3)   தன் நிறைகுறைகளையும் புறசூழல்களையும் அறிந்து, அதற்கேற்ப செயல்படல்

4)   தொடர்முயற்சி

5)   இலக்கில் தெளிவு, இளகிய அணுகுமுறை

6)   கூட்டுமுயற்சிபிறருடன் சேர்ந்துசெயல்படும் ஆற்றல்

7)   வெற்றியின் பலனை பிறருடன் பங்கிடல், பிறரையும் வெற்றியாளராக்குதல், பிறர்நலன் பேணுதல்.

எனது அறிவுக் கெட்டிய வகையில் இந்த ஏழுகுணங்கள் தான் மிகப்பெரும் சாதனையாளர்களை, வெகுசனங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. எந்ததுறையில் வெற்றியாளராயிருப்பினும்,  அவர்கள் இந்த ஏழு குணங்களையும் உள்வாங்கி கடைப்பிடித்திருப்பார்கள்.

இக்குணங்கள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த வாரங்களில் விரிவாக உதாரணங்களுடன் அலசுவோம். அதனுடன், அவை ஒவ்வொன்றையும் எப்படி உள்வாங்கி கடைப்பிடிக்கலாம் என்பதையும் சிந்திப்போம்.

காலம் வெகுவேகமாக - நாள், வாரம், மாதம், வருடம் என உருண்டோடிக்கொண்டிருக்கும்போது – நாம் போய்க்கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா? சரியான இலக்குகளை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோமா?இல்லையெனில் அந்நிலையை எப்படி அடைவது என்பதையெல்லாம் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டும்.மிக எளிய சூழலில் பிறந்து வளர்ந்த நான், எதிர்பாரா வெற்றிகளை அடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் ஒவ்வொரு கட்டத்திலும் உதவுவதற்கு ஆட்கள் இருந்தும்; எனது பல்வேறு தெளிவற்ற, இலக்கற்ற செயல்பாடுகளால்; அடையவேண்டிய பல உயரங்களை அடையாமல்,அண்ணாந்து பார்த்து ஏங்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டேன்.

நான் அடைந்த வெற்றிகளும், அடையாமல் கோட்டை விட்ட அனுபவங்களும் எனக்களித்த பாடங்கள் ஏராளம், ஏராளம். அப்பாடங்களையும், நான் படித்துணர்ந்த வெற்றியாளர்களின் சிந்தனைகளையும், அவர்களின் அனுபவங்களையும் தொகுத்து சிந்தித்ததால் எழுந்ததே இத்தொடர்.

வெற்றியாளர்களின் குணங்களை அலசி ஆராய்ந்து, அவற்றை நாம்கைக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி சிந்திக்கு முன் ஒரு மிக முக்கிய கேள்விக்கு விடை காண வேண்டிய நேரம் வந்து விட்டது.

அக்கேள்வி –

எதுவெற்றி?

வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. நீங்கள் எதனை வெற்றி எனக்கருதுகிறீர்கள் என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். பொதுவாக”வெற்றி”என்பது - நிறைந்த செல்வம்,.உடல்நலம், மனமகிழ்ச்சி, உயர்கல்வி, இனியகுடும்பவாழ்வு, பதவி, புகழ் – என சொல்லிக்கொண்டே போகலாம். சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால்– ”பணம், பதவி, புகழ்” என்பதுதான் பலரின் உள்ளத்திலும் தோன்றும்.

ஆனால் தான் வகித்த பலப்பலபதவிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் விலகியதோடு மட்டுமல்லாமல், செல்வச் செழிப்பு நிறைந்த குடும்பவாழ்வையும், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் புகழோடு வகித்த பொறுப்பையும் புறந்தள்ளினார் ஒருவர்.  சாதிக்கொடுமைகளாலும், மூடநம்பிக்கைகளாலும் அழுந்திப்போயிருந்த மக்கள் நல்வாழ்விற்கு தன் வாழ்நாள் முழுதும்பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார்தான் அவர். அவரைப்பற்றி பேரறிஞர் அண்ணா ”தன் வாழ்நாளிலேயே தான் பாடுபட்ட சமுதாயத்தின் இழிவினை பெரும் பகுதி நீக்கி வெற்றி வாகை சூடியவர்” எனக் குறிப்பிடுகிறார்.

இந்திய தேசத்தந்தை எனப்புகழப்படும் அண்ணல்காந்தி, மதுரைக்கு வந்த போது அங்கு வாழ்ந்த மக்களைப் பார்த்து, ”என்மக்களுள் பெரும்பாலோர் கோவணத்துடன் அலையும்போது, எனக்கெதற்கு கோட்டும், சூட்டும் எனச் சொல்லி; வேட்டி துண்டுக்கு மாறினார்” எனச் சொல்வார்கள். “Half naked Fakir” என பிரிட்டனில் தான் கிண்டலடிக்கப்பட்டபோதும், அதனை கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது, இந்திய விடுதலைக்கும்; பின் மத நல்லிணக்கத்துக்கும் பாடுபட்டுதன் இன்னுயிரை இழந்த அண்ணல் காந்தியடிகள் வெற்றியாளர் என்பதில் அய்யமென்ன?

 

காவியுடையில் இந்தியத் துறவியொருவர் அமெரிக்காவில் இரயிலில் பயணம் செய்தபோது, அவர் ஆங்கிலம் தெரியாதவர் என எண்ணி வெள்ளையர்கள் சிலர் நக்கலடித்துக் கொண்டு வந்தார்கள். துறவியும் எள்ளளவும் புரியாதவராகவே பயணிக்கிறார்.இரயில் நிலையத்தில் அவரை வரவேற்கவந்தவர்களுடன் சரளமாக உயரிய ஆங்கில நடையில் அவர்பேசிக்கொண்டிருந்ததைக்கேட்ட “கிண்டலடித்தோர்” அவமான உணர்வுடன் மன்னிப்பும் கேட்டனர். தனக்கெனவாழாது, உலகமானுடம் உன்னத ஆன்மீக உணர்வுடன் வாழவேண்டு மென பாடுபட்டஅத்துறவி – சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்க்கையில் வெற்றியில்லை எனச் சொல்லமுடியுமா?

 

உலக செல்வந்தர்களுள் முன்னணியில் இருப்பவர், தன் நிறுவனத்துக்குப் போட்டியாக தெரிபவர்களை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குபவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர் பில்கேட்ஸ். அவரோ இப்போதெல்லாம், அவர் மனைவி மெலிண்டாவுடன் “கேட்ஸ்அறக்கட்டளை” மூலம் “போலியோ” போன்ற நோய்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் அறவே ஒழிக்கப்பட வேண்டு மெனப்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். அவரும், அவரது அறக்கட்டளை மூலம் தன் சொத்தின் பெரும் பகுதியை வழங்கிக் கொண்டிருக்கும் Warren Buffett அவர்களும், தலை சிறந்த வெற்றியாளர்கள் தானே?.

அதெப்படி, உலகிலேயே முதல் சில இடங்களில் இருக்கும் செல்வந்தர்களையும்; நாட்டு விடுதலை, சமுதாய விடுதலைக்குப் பாடுபட்டு பெரும்புகழ் பெற்றவர்களையும் நம்மோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்ற கேள்விஎழுலாம்.

மிகுந்தபணம், உயர்ந்தபதவி, தான் எடுத்துக் கொண்ட துறையில் அருஞ்சாதனை என வெற்றி பெற்றவர்கள் பலரையும் நாம் அறிவோம். அந்தவகையில் நாமே எதிர்பாரா அளவில் அடுத்த சில ஆண்டுகளில் வெற்றி பெற இயலும் என உறுதியாக நம்புகிறேன். எந்த துறைகளில் எந்த அளவு வெற்றியடைய வேண்டும் என முடிவு செய்து கொள்ளூங்கள். அம்முடிவெடுத்ததும், நிர்ணயித்த இலக்குகளை நொக்கிய பயணத்தை வேகப்படுத்த நிச்சயம் இயலும்.வெற்றியைப் பற்றி அமெரிக்க வெற்றிச் சிந்தனையாளர் Earl Nightingale சொல்லும்போது “Success is the progressive realization of a worthy goal”.என்பார்.

“Success is an inside job” எனவும் பலவெற்றியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அவர்கள் நம்புவதெல்லாம் - “வெற்றி என்பதுமு தலில் ஆழ்மனதில் நிகழ்ந்த பின்னரே வெளிப்புறத்தில் பரிணமிக்கிறது” என்பதே.

”வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு”

என்பதுதானே அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுவதும்.

அமெரிக்காவிலிருந்து Success” என்ற பெயரில் வெளிவரும் ஒருவரலாற்றுச் சிறப்பு பெற்ற மாத இதழ்பதிப்பாளர், Darren Hardy தனது How to have the best year ever?” என்ற புத்தகத்தில், ஒவ்வொருவரும் தம் வாழ்வின் எட்டு அம்சங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அந்த எட்டு அம்சங்கள் என்னென்ன? அவற்றில் வெற்றியடைய என்ன வழிகளை அவர் சொல்லுகிறார் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

 

by Swathi   on 11 Aug 2015  0 Comments
Tags: Successful Peoples   Vetripathai   வெற்றிப் பாதை   வெற்றியாளர்           
 தொடர்புடையவை-Related Articles
வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3 வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.