|
|||||
மது அறியா மாண்பாலர்களைக் கொண்டாடிய வரலாற்று மீட்புக்குழு ! |
|||||
![]()
அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வரலாறு மீட்புக்குழு சார்பில் தேசிய அளவில் மது அறியா 133 மாண்பாலர்கள் மற்றும் கலை, புலமை, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்த 67 மாண்பாலர்களுக்கு மாமனிதர் விருது வழங்கும் விழா மருத்துவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமுதா கலந்துகொண்டு மது அறியா மாண்பாளர்கள் மற்றும் கலை, புலமை, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்தவர்களுக்குப் பதக்கம், விருது மற்றும் தமிழர்களின் பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருளாக இருந்த கல் உருளையையும் வழங்கி பாராட்டினார்
நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமுதா பேசும்போது "நாம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை உணவு முறைகள் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகும் நாம் வாழ்வதற்கும் அர்த்தம் வேண்டும் வாழ்ந்ததற்கும் அர்த்தம் வேண்டும் என நாம் வாழ வேண்டும் அர்த்தம் உள்ள வாழ்க்கையாக நாம் வாழ வேண்டும் வரலாறு படைத்தவர்களாகவும் படைப்பவர்களாகவும் நாம் வாழ வேண்டும்" எனக் கூறினார்.
முன்னதாக விருது பெறுபவர்களுக்குத் தமிழர்களின் கலாச்சாரப்படி பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு கிராமிய இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் இந்நிகழ்ச்சியை ஒட்டி வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் பண்டைய கால நாணயங்கள் பல்வேறு நாட்டில் உபயோகப்படுத்தப்படும் காசுகள் இந்தியாவில் இதுவரை பயன்பாட்டில் இருந்த காசுகள் மற்றும் பண நோட்டுகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
|
|||||
by hemavathi on 01 May 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|