LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலைமுடி(Hair )

வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !!

இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் முதன்மையானது இளைமையிலேயே முடி நரைத்திருப்பது தான்.இப்படி இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. 


பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவரீதியாக காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். 


இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்திவிடுகிறது. 


முடி நரைப்பதற்கான காரணங்களை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே முடி நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!! 


இன்றைய அவசர உலகில், நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன் இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.


தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.


நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது தலையை ஆக்ரமிக்கிறது. 


இந்திய மக்களின் கருமையான கூந்தலுக்கான இரகசியம் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையை சமையலில் சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எண்ணெயில் ஊற வைத்து, கூந்தலுக்கு தடவி வரலாம்.


கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காப்பர் தான், உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது. ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து, வெள்ளை முடி ஏற்படுகிறது. மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.


தைராய்டு இருந்தாலும் வெள்ளை முடி வர ஆரம்பிக்கும். அதிலும் தற்போது நிறைய இளம் வயதினர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆகவே இவற்றில் சரியாக இருந்தால், தைராய்டு பிரச்சனையுடன், வெள்ளை முடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். 

by Swathi   on 03 Jun 2014  22 Comments
Tags: Avoid White Hair   Vellai Mudi   வெள்ளை முடி              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா?
வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !! வெள்ளை முடி வருவதை தவிர்க்க சில வழிகள் !!
கருத்துகள்
25-Sep-2017 12:13:24 பூஜா said : Report Abuse
எனக்கு வயது 22 தைரொய்ட் 5 வருசமா இருக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கு. தைரொய்ட் கும் வெள்ளை முடிக்கும் சம்பந்தம் இருக்குமா!!!! எப்படி சரி செய்வது வெள்ளை முடியை...
 
16-Mar-2017 04:57:19 preethi said : Report Abuse
வைட் ஹேர் போக என்ன செய்ய வேண்டும்
 
16-Dec-2016 10:03:41 Iyappan said : Report Abuse
My ஏஜ் 30 face white ஹேர் அதிகமா இருக்கு .
 
02-Dec-2016 00:34:06 sanjai said : Report Abuse
வைட்டமின் பி12narayai போகும்,கறிவேப்பிலை,nelikaai, கரிசலாங்கண்ணி,ஸ் எம்பருத்தி,ஒலிவ் ஆயில், இவை அனைத்தும் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும் நரை oliyum
 
16-Sep-2016 15:00:55 நிராஜ் said : Report Abuse
எனக்கு ஒரு சில முடி நரைத்து இருந்தது இப்போது எல்லாம் வேகமாக நரைத்து விட்டது. அதை சரி செய்ய ஏதாவது வளிமுறை உள்ளதா
 
14-May-2016 03:20:50 seenuvasan said : Report Abuse
sir enaku age 19 akuthu ippawe white hair vanthudichi itha pooka tips sollunga
 
28-Apr-2016 21:36:56 Kirti said : Report Abuse
சால்ட் அண்ட் பேப்பர் ஸ்டைல் நுசொல்லுங்க பாஸ்
 
21-Mar-2016 02:07:54 சக்திவேல் said : Report Abuse
சார் எனக்கு வெள்ளை முடி அதிகம் இருக்கு நானும் என்னவெல்லாமோ செய்துவிட்டேன் பயன் இல்லை நான் இப்ப உங்க தேடைல்ஸ் ஒண்லினே ல பார்த்தேன் சோ எனக்கு வழிசொல்லுங்கள் வெள்ளை முடி இருப்பதால் அரிப்பும் இருக்குமா ??? சக்திவேல் கும்பகோணம்
 
18-Mar-2016 00:00:38 saravanan said : Report Abuse
enaku age 20. enaku kitta thatta ellamey narachu pochu... i feel very sad...
 
25-Feb-2016 09:50:31 karthikeyan said : Report Abuse
கரிப்வேப்பில்லை வெறும் வயேற்றில் சபெடுஇங்கல்..
 
26-Jan-2016 02:42:55 G sangeetha said : Report Abuse
எனக்குத்ய்ரொஇட் உள்ளது சோர்வு முதுகு வல்லியல் அவதி படுகிறேன் என்ன உணவு முறை முலம் இதை சரி செய்ய முடியும் எனக்கு வழி காட்டுங்கள் t
 
07-Dec-2015 02:44:00 ramesh said : Report Abuse
வெள்ளை முடி அதிகமா இருக்கு சரிசெய்ய டிப்ஸ் சொலுங்க
 
04-Sep-2015 12:59:09 sarath said : Report Abuse
Karuveppilai eduthu kayavachu arachi daily 1.teaspooon kalaila saptu vara naraimudi pogum athudan daily amla juice morning ni8 10 ml kudicha pohum narai mudi marayum
 
13-Aug-2015 03:57:43 ramanisubbaiyan said : Report Abuse
எனக்கு வயது 30 face ஹேர் நரைத்து vetathu thali mudium நரைத்து vetathu ethi ethai sari pana ena vali
 
21-May-2015 00:19:07 muniskannan said : Report Abuse
நான் 31 வயது ஆன் எனக்கு நரை முடி அதிகமாக இருக்கிறது மற்றும் சுண்டும் அடிக்கடி வருது இதற்க்கு தீர்வு சொல்லுங்க பிளிஸ்
 
03-May-2015 22:22:52 காண்டீபன் said : Report Abuse
பயனுள்ள தகவல்
 
25-Feb-2015 03:36:05 நித்யா said : Report Abuse
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் ஒரு குழந்தைக்கு 5 வயது ஆகிறது, இன்னொரு குழந்தைக்கு 1 வயது ஆகிறது. இருவருக்கும் வெள்ளைமுடி உள்ளது.இதற்கு என்ன கரணம்.(எனக்கு வயது 27,என் கணவருக்கு 37,எங்களுக்கும் வெள்ளை முடி இளம் சிக்கிரமே வந்து விட்டது)
 
10-Oct-2014 08:17:25 Ans... said : Report Abuse
கருவேப்பிலை உண்மையில் ஒரு நல்ல நிவாரணி நாம் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட்டு வந்தால் நரைமுடி நிறம் மாறுவதை சில நாட்களில் காணலாம்...
 
01-Sep-2014 03:24:45 ராஜ் said : Report Abuse
முடியை வெட்டி விடுங்கள் அல்லது மொட்டை அடித்து விடுங்கள்
 
11-Aug-2014 07:45:37 sankar said : Report Abuse
வெள்ளை முடி அதிகமா இருக்கு சரிசெய்ய டிப்ஸ் சொலுங்க
 
28-Jul-2014 03:16:39 geetha said : Report Abuse
வெள்ளை முடி அதிகமா இருக்கு சரிசெய்ய டிப்ஸ் சொலுங்க 22 எஅர்ஸ் தி atchu
 
22-Jul-2014 12:38:19 மனோஜ் குமார் said : Report Abuse
மூன்று வெள்ளை முடி தெரிகிறது இதற்கு என்ன காரணமாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.