|
||||||||
உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !! |
||||||||
இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த உடல் உஷ்ணம் அதிகரித்தல் முக்கியமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது. இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை கண்டறிந்துள்ளனர். அந்த எளிய மருத்துவ முறை உங்களுக்காக இதோ, தேவையான பொருள்கள் : 1.நல்லெண்ணெய் 2.பூண்டு 3.மிளகு செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை இன்ரடு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை தகவல் தொழில்நுட்ப் துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம். |
||||||||
by Swathi on 25 Oct 2014 48 Comments | ||||||||
Tags: Reduce Body Heat Remedies to Reduce Body Heat Udal Veppam Kuraiya Kulanthai Pirakka Tips Kulanthai Pirakka Aanmai Kuraivu Simple Treatment ஆண்மை குறைவு நீங்க | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|