இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில், வங்கிகள் மூலம் பொதுமக்களிடம் உள்ள தங்கத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இதனை சரிசெய்ய மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைவிற்கு தங்கம் இறக்குமதியும் ஒரு முக்கிய காரணம் ஆகும். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு இறக்குமதி வரியை, மூன்று மடங்காக உயர்த்தியது. ஆனால், இதனால் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
இந்நிலையில், நாட்டில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின் படி, வங்கிகள் பொதுமக்களிடம் உள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு அதற்கு இணையான பணத்தை கொடுக்கும். அப்படி வங்கிகள் வாங்கும் தங்கத்தை தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனங்களிடம் அளிக்க ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பற்றி பல வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|