LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கால் பராமரிப்பு (Foot Care)

கால் ஆணி காணாமல் போக !!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் , அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கு வருகிறது.

காலில் ஆணி வந்து விட்டால், பாத‌த்தை தரை‌யி‌ல் வை‌க்க முடியாத அள‌வி‌ற்கு ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது. இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

என்ன தான் காரணம் ?

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத் தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.  

என்ன தான் தீர்வு?

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

அம்மான் பச்சரிசி செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.

மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மைய அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சு கட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க கால் ஆணி காணாமல் போகும்.  

சித்திரமூலம்(கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா... மூணு நாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண் உண்டாகும். அப்படி வந்தா... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும் காணாமப்போயிரும்.

இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

by Swathi   on 14 Oct 2015  26 Comments
Tags: Kaal Aani   Kaal Aani Treatment   Kaal Aani Poga   Kaal Aani Home Treatment   Kaal Aani Maruthuvam   Patti Vaithiyam for Kaal Aani   Kaal Aani Home Remedies  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கால் ஆணி காணாமல் போக !! கால் ஆணி காணாமல் போக !!
கருத்துகள்
28-Nov-2020 06:54:30 Thirumal said : Report Abuse
எனக்கு கடந்த 10 வருடங்களாக காலில் ஆணி இருக்கிறது. வலி அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை 2 முறை செய்யப்பட்டது. திரும்பவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வலி மிகவும் அதிகமாக இருக்கிறது. தீர்வு வேண்டும். நன்றி திருமால்
 
28-Nov-2019 13:51:47 siranjeevi said : Report Abuse
i am having corn last two months what is the medicine for that
 
14-Sep-2018 04:44:06 Baskar said : Report Abuse
சார், என்னக்கு ஜூன் மாதம் காலில் பிசிர் யறியாது ஒரு மாதம் மாக குத்திய இடம் கல் போன்று மாறி வலி எடுக்கிண்டது நன் என்ன செய்ய வேண்டும் உதவவும் நன்றி எதை கால் ஆணி என்கிறார்கள்
 
20-Aug-2018 12:41:40 Viji said : Report Abuse
Sir enaku kal ani Eruku but valikala paravalaya lla treatment edukanuma
 
03-Jul-2018 03:44:36 Sundarsingh said : Report Abuse
Mahal ani elithil nekkum murai sollunge
 
26-Jun-2018 17:59:42 vallavan said : Report Abuse
Vannakam சார் எனக்கு கால் aaani ப்ரோப்லேம் ௮ மாசமா iருக்கு ப்ளஸ் எதாவது மெடிசின் சொல்லுங்க சார்
 
20-Dec-2017 08:42:49 Manikandan said : Report Abuse
கால் ஆணி முழுவதும் சரி ஆக என்ன செய்ய வேண்டும் சார்... நடகவே முடியல ஏதுன மெடிசிசன் இருந்தா சொல்லுங்க சார்....
 
27-Sep-2017 10:34:10 LOGESHWARI ஸ் said : Report Abuse
இந்த குறிப்புகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது .
 
29-Apr-2017 05:42:14 Karthick said : Report Abuse
Kal aani medicine
 
02-Apr-2017 02:09:21 maruthu said : Report Abuse
யாராவது மருந்து கொடுப்பீங்களா ஆணி காலுக்கு
 
19-Mar-2017 00:37:04 கே.jothibasu said : Report Abuse
என் காலில் ஆணி உள்ளது அதை சரி செய்ய .
 
15-Mar-2017 04:18:57 அருண் J said : Report Abuse
இ இனம் சோ ஹாப்பி டு செ போர் தங்க யு பேஸாஸே மீ ஹில்டெர் பிரதர் பாஸ்ட் ௧௫ இயர் ஹி ஐஸ் கெட்டிங் ட்ராப்பிலே போ கல் ஆணி நொவ் இல் தெள்ள டு மீ பிரதர் டூ திஸ் கிண்டி ஒப்பி ற்றேஅத்மேன்ட் சோ தங்க ஹினே
 
26-Feb-2017 07:46:37 venkatesh said : Report Abuse
sir kaal aani enga appa erukku na doctor sonna operation panna sonnaru operation pandom konja naal aprm vali erukku aani nalla aavala
 
23-Jan-2017 02:19:10 saravanan said : Report Abuse
Sir enaku 3 varusama ani iruku .operation panniten .aanal thirupi valanthuruchu rompa mudiyala .nan vorla illa velinadla irukan .intha velikaga athiga pannam kedirukan.athnala voruku poga mudiyala .marriage pandrathukula ithu kunam agnum pls konjam enaku ethavathu vali sollunga sir .ovru nodium valikuthu.+85363793265.what's up numper
 
13-Jan-2017 18:58:56 stephen said : Report Abuse
வேப்பமரத்து எண்ணெய் + கொமட்டி இலை(கிராம புரங்களில் கிடைக்கும் )இரண்டையும் சிறிது சூடாக்கி ஆணி கால் இருந்த இடத்தில் இரவு கட்டி விட்டு காலையில் அவிழ்த்து விடவும்.மூன்று நாட்கள் இவ்வாறு செய்தால் ஆணி கால் ஒரு வாரத்தில் காணாமல் போய்விடும்.இது என்னுடைய சொந்த அனுபவம்.100% நம்புங்கள்
 
18-Oct-2016 21:55:06 கோகுல் said : Report Abuse
கால்ல ஆணி இருக்கு சார் .காந்தம் வச்சா சரியாகமா சார்.
 
12-Oct-2016 00:29:49 prakash said : Report Abuse
பிராண்ட்ஸ் என்கிட்ட மேடிசன் இருக்கு காண்டாக்ட் மீ
 
19-Sep-2016 21:56:17 Vasanthan said : Report Abuse
Enaku kall la mulu kuthichi one month ku munadi ipo athu anni kall mathri iruku ithu na Ena pana sari panalam nu konjam soluga pls
 
12-Sep-2016 09:56:13 viki said : Report Abuse
ஹாய் சார்.எனக்கு காலில் ஆணி வந்தது நன் ஆபரேஷன் பண்ணி விட்டேன்.மேலும் பரவாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்...எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்
 
21-Jul-2016 07:04:56 raji said : Report Abuse
ஐ அப்ப்ளியேட் கார்லிக் இந்த மை பீட். பட் நெஸ்ட் டே ஐபி ஐ சா some நீர் கொப்பளம் ஐஸ் கமிங் நெஸ்ட் டு தஃட் ஆணி. வாடீ ஐஸ் தி றெமீடிய போர் திஸ். kindly அட்வைஸ் immediately because ஐ டோனோட க்நொவ் வ்ஹீதேர் டு கோன்டினுக்கே கார்லிக் ஓர் நோட்
 
23-Apr-2016 03:33:05 Ravi said : Report Abuse
இ ஹவெ கால் ஆணி for past 12 ய்ர்ஸ். இட்ஸ் பைநிங். ப்ளீஸ் டெல் மீ டு கெட் ரிட் பிரோம் திஸ் சார். ப்ளீஸ்
 
07-Mar-2016 07:36:09 sagar said : Report Abuse
Sir nalla marunthu solluga
 
14-Feb-2016 06:39:09 நிசார் said : Report Abuse
வணக்கம் ஓராண்டு காலமாக ஆணிக்காலால் மிகவும் அவஸ்தைப்படுகிறேன். எனது திருமணத்திற்கு முன்பாகவே இது குணமடைய சிறந்த ஆலோசனை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி
 
13-Feb-2016 06:22:58 malik said : Report Abuse
Aasthu sali neenga vaithiyam sollunga
 
19-Jan-2016 01:32:48 சாந்தினி said : Report Abuse
எனக்கு தினமும் சளி பிடிகின்றது. எனக்கு ஒரு வைத்தியம் சொல்லுங்கள்.
 
10-Jan-2016 21:55:46 vicky said : Report Abuse
kaal anni
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.