LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !!

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என பல பெயர்கள் உள்ளன. கண்டங்கத்தரி மூலிகை சித்த மருத்துவத்தில் புகழ் பெற்ற மருந்தான தசமூலம் செய்யப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் ஒன்றாக உள்ளது.

நீர்ச்சுருக்கு குணமாக :

உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் இறங்கும் பொழுது நீர்த்தாரையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகும். இதைக் குணப்படுத்த கண்டங்கத்திரியிலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இலையிலுள்ள முட்களை வெட்டி எடுத்து விட்டு, அம்மியில் வைத்து நைத்து, கையில் வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றில் ஒன்னரைத் தேக்கரண்டியளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து எந்த நேரத்திலும் சாப்பிட்டால், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர் சரளமாக இறங்கும்.

வியர்வை நாற்றம் மறைய :

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

வாத நோய்கள் குணமாக :

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.

பாத வெடிப்புகளுக்கு :

ஒரு சிலருக்கு குதிகாலில் வெடிப்பு ஏற்படும். சில சமயம் வெடிப்பு பெரியதாகி இரத்தம் கசியும். இந்த சமயம் நடமாட முடியாதபடி வலிக்கும். ஒரு சிலருக்கு கால் பெருவிரல்களில் கூட வெடிப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு கைகளில் கூட வெடிப்பு உண்டாகும். இதைக் குணப்படுத்த கண்டங்கத்திரியிலையைக் கொண்டு வந்து, பத்து இலைகளை எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு அதில் நான்கு தேக்கரண்டியளவு தேங்காஎண்ணெய்யை விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சச் வேண்டும். இலை எண்ணையில் சிவந்து, கருகும் சமயம் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறிய பின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து விட்டு, எண்ணெயைத் துணியில் வடிகட்டி ஒரு கப்பில் விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானபோது இந்த எண்ணெய்யை வெடிப்புகளின் மேல் தடவி வந்தால் பித்த வெடிப்பு மூன்றே நாளில் குணமாகும்.

நெஞ்சு சளி வெளியேற :

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

வெண் குஷ்டம் மறைய :

வெண் குஷ்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண் குஷ்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

நாள்பட்ட இருமலுக்கு :

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

பல்வலி குணமாக :

பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி  பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

கண் பார்வை தெளிவு பெற :

கண்டங்கத்திரிப்பூக்களை 100 கிராம் அளவு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுள்ளி ஆகியவற்றை சேர்த்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியைப் பாலில் கலந்து 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை கூர்மையாகும்.

மூட்டுவலி குணமாக :

கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறுஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய்சேர்த்து தைலபதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக்கற்பூரம்தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடுசெய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவர,சகலவலிகளும் உடனே குணமாகும்.

ஆஸ்துமா குணமாக :


ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு. சமீபத்தில் எனது எழுத்துக்களை இடைவிடாது வாசிக்கும் வாசகர் ஒருவர்ஒரு கடிதம் எழுதியிருந்தார். தான் ஆஸ்துமா எனப் படும் இரைப்புநோயில்மிகவும் துன்புறுவதாக வும்; தனக்கு ஏதேனும் சித்த மருந்துகளைப்பரிந்துரைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் இந்தநோயைப் பற்றி ஒரு அற்புதமான பழமொழியொன்றையும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

"நித்திய கண்டம் பூரண ஆயுள்' -இதுவே அந்தப் பழமொழியாகும். அதாவது தான்படும் தினசரி வேதனையானது மரணத்திற்கு ஒப்பானது. ஆனால் பூரண ஆயுளுடன்இருப்பதாகவும் அர்த்தமாகிறது.

அந்த வாசகருக்காகவே மானுடனுக்கு உண்டாகும் கண்டத்தை கத்திரிபோல் நீக்கும்கண்டங்கத்திரி பற்றிய மருத்துவ உண்மைகளைக் குறிப்புகளாக வரைந்துள்ளேன்.

கண்டங்கத்திரி இலை, பூ, காய், வேர் ஆகிய வற்றை வகைக்கு 20 கிராம்எடுத்துக் கொள்ள வும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்த ரத்தை,அதிமதுரம், சீரகம், சோம்பு, கடுஞ்சீரகம், ஜாதிக்காய், சடாமாஞ்சில்,சதகுப்பை, ஓமம், மாசிக்காய், கற்கடகசிருங்கி, ஏலக்காய், கடுக்காய்,இந்துப்பு, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து,அனைத்தையும் தூள் செய்து பத்திரப்படுத்தவும்.

இதில் ஐந்து கிராம் அளவுபொடியை எடுத்து இரண்டு டம்ளர் (400 மிலி) நீருடன்சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து சிறிது பனங்கற்கண்டுசேர்த்துச் சுவை யாக, காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தலைவலி, தலைபாரம், தும்மல்,மூக்கடைப்பு, பசியின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கி, நித்தியசௌக்கியம் மற்றும் பூரண ஆயுளுடன் வாழலாம்.

by Swathi   on 14 Oct 2015  6 Comments
Tags: Kandankathiri   Kandankathiri Benefits   Kandankathiri Health Benefits   Kandankathiri Leaves Benefits   Kandankathiri Maruthuvam   கண்டங்கத்தரி   கண்டங்கத்தரி மருத்துவம்  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !! கண்டங்கத்தரி மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
16-Apr-2020 17:22:21 Muralidharan said : Report Abuse
I am hearing impaired. Continuous ringing sound in both ஏர்ஸ் Is there any medicine to cure the ringing சவுண்ட் I am believing Siddha and uniony ஒன்லி தேங்க்ஸ் முரளிதரன் 9940470401
 
23-Jul-2019 06:01:30 விஸ்வநாத் said : Report Abuse
கண்டங்கத்திரி வேறு... முள்ளிகத்தரி அல்லது முள்ளிக்காய் வேறு... நுரையீரலின் பிரச்சனைக்கு கண்டங்கத்தரியே மருந்து... முற்றிய பழமே சிறிதாகத்தான் இருக்கும்... முள்ளிக்காய் பழம் கொஞ்சம் பெரிதாக இருக்கும். முள்ளிக்காய் குழம்பு மிகுந்த ருசியுடையது... மேலே blogல் கூறியது அனைத்தும் கண்டங்கத்தரி யின் மருத்துவ குணங்கள்...
 
25-Aug-2018 12:40:15 Iniya said : Report Abuse
நான் கடந்த சில மாதங்களாக இரும்பல் மூலம் அவதிப்படுகிறேன் இரும்பலுடன் சேர்த்து இரத்தம் கலந்து வந்தது அதற்கு chest x-ray எடுத்தக்கு அலர்ஜ்ஜி என்று கூறிவிடார்கள் மூச்சு விட மிகவும் சிரமமாக இருக்கிறது தொண்டை கட்டுகிறது எனக்கு எதாவுது கூறுங்கள்
 
19-Jun-2018 13:03:10 ramzam said : Report Abuse
நான் மூக்கில் சதை வளர்ந்து துவாரங்களை அடைத்து விட்டது. அவ்வளவு பெரிதாக இருக்கிறது. சுத்தமான காற்று கிடைக்காததால் வந்த நோவினை என்று புரிந்து கொண்டேன் ஆனால் குணம் காண தேடுகிறேன். உங்கள் ஆரோக்கியம் பற்றிய அறிவை பகிர்ந்து கொள்ள நாடுகிறேன். நன்றி ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சை மட்டும் தான் வழி என்கிறது அது விருப்பம் இல்லை.
 
08-Feb-2018 05:48:19 T வி சாம்ப மூர்த்தி said : Report Abuse
எனக்கு உங்களது கண்டங்கத்திரி மருது வேண்டும் . தயார் செய்து தரமுடியுமா ? சார்ஜ்ஸ் தருவேன்
 
07-Oct-2016 03:23:57 sathyanarayanan said : Report Abuse
ப்ளீஸ் சென்ட் டு details
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.