கன்னியாகுமரி எம்பி எச்.வசந்தகுமார் காலமானார்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1950ம் ஆண்டு பிறந்த திரு. எச். வசந்தகுமார் அவர்கள் முதுகலை தமிழ் படித்துள்ளார். ரூ500 சம்பளத்தில் தொடக்கத்தில் பணியாற்றிய இவர் 1978க்கு பிறகு வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையைத் தொடங்கினார். மிதிவண்டியில் வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்று வந்த இவர் தொடர்ந்து தன்னுடைய கடின முயற்சியால் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அந்நிறுவனம் 60க்கும் அதிகமான கிளைகளுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் இயங்கி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மீதும், சோனியா காந்தி குடும்பத்தின் மீதும் தீவிர பற்று கொண்டவர். ‘வசந்த் டிவி’ என்ற தொலைக்காட்சியைத் தொடங்கினார். அரசியல் மற்றும் வணிகத்தில் சாதித்த இவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ‘வெற்றிக் கொடிக்கட்டு, வெற்றிப்படிக்கட்டு” என்ற நூலாக வெளியிட்டார். கரோனாத் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்தார். இவரின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.
|