LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வாய் பராமரிப்பு(Mouth Care)

வாய்ப்புண் வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் !!

உலகில் ஐந்தில் ஒருவர் வாய்ப்புண்ணால் அவதி படுவதாக சொல்கிறது ஒரு புள்ளி விவரம். வாய்ப் புண் ஏற்படுவதற்கான காரணங்கள், வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்போது விரிவாக பார்ப்போமா...

வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள திசுத் தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படந்தைத்தான் வாய்ப்புண் என்கிறோம்.

உதடு, நாக்கு, கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப் பகுதியில் வாய்ப்புண் வரலாம். இதனால், ஏற்படும் வலி காரணமாக பேசவோ, உணவு உட்கொள்ளவோ சிரமமாக இ்ருக்கும்.

வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்கள் :

பித்தம் அதிகரித்தால், வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி, பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற உயிர்ச்சத்துக் குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை, மதுப்பழக்கம், ஹார்மோன் மாறுபாடு, பற்கள் மற்றும் வாய் சுத்தமின்மை, ஹெர்ப்பெஸ் வைரஸ் மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்.

வாய்ப்புண்கள் எத்தனை நாட்களில் குணமாகும் :

வாய்ப்புண்கள் 7 முதல் 10 நாட்களில் குணமாகிவிடும். நீண்ட நாட்கள் ஆறாத புண்கள், புற்றுநோயாகவும் மாறலாம்.

வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க, அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பற்கள் மற்றும் வாயினை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாதவாறு தியானம் மற்றும் யோகா் பயிற்சி செய்ய வேண்டும்.

வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்ப்புண் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய் கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.

பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

வாய்ப்புண் மீது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவிவர, நல்ல பலன் கிடைக்கும்.

மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்துத் தடவலாம்.

மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் கீரை, வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாறாகக் குடிக்க வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வாயுத் தொல்லையும் நீங்கும்.

ஒரு துண்டு கடுக்காயை வாயில் அடக்கிவைத்திருக்க, வாய்ப்புண் ஆறும்.

காலையில் வெறும் வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும். மஞ்சள் தூளை தேனில் குழைத்துப் புண்ணின் மீதும் தடவலாம்.

துளசி இலையினை வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படி மென்று, மென்றதை விழுங்கிவிட வேண்டும்.

புதினா இலைச்சாறு தடவினால், எரிச்சல், வலி குணமாகும்.

துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும்.

by Swathi   on 25 May 2015  18 Comments
Tags: வாய் புண்   Vaai Pun   Vai Pun   Mouth Ulcer           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வாய்ப்புண் வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் !! வாய்ப்புண் வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் !!
கருத்துகள்
27-Aug-2020 13:38:11 Sabari said : Report Abuse
Sir enaku naaku edges and ulkannam and lips la redish ah irruku and erichal ah irruku what is the home remedy for this
 
08-May-2020 12:10:47 T said : Report Abuse
Enaku 1week ah vaayile utaddil ul purama black spot matiri iruku athe matiri vayil side tolilayum black spot vanthuruku. Ithu ethunale erpadum? Ithu tannale gunam aagiruma? Enaku ithuku munnadi intha matiri laam vanthate ille. Rombe bayama iruku. Antha black spot paakke rattam kaaduna epdi irukum athe matiri iruku ana enaku vaayi ulle ethume adi padale suddenly ipdi iruku. . Pls suggest me anything..
 
03-Feb-2020 06:47:47 Siva sanjari said : Report Abuse
Nakula China punmathiri irruku sapittal eriuthu
 
01-Jul-2019 13:18:16 Suresh said : Report Abuse
Sir enakku oru varam pun varudhu oru varam nalla erukku idhuku marundhu sollunga
 
23-Apr-2019 08:04:00 சு.ஆதிமுத்து said : Report Abuse
உமிழ் நீர் சுரக்காமை ,வாய் உலர்தல் ,வாய் புண் ,இதனால் பல் வலி , முகம் மற்றும் தலை குடைச்சல் ,மண உளைச்சல் மலச்சிக்கல் ஏற்படுகிறது . இது சென்ற ஒரு வாரகாலமாக உள்ளது .இதற்க்கு ஆங்கில மருத்துவரிடம் பொது மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனைப்பெற்று மருந்து உட்க்கொள்கிறேன் . சற்றே குணமாகிவருகிறது . ஆனால் எதிர்பாராதவிதமாக இரவு தூக்கமின்மை ஏற்படுகிறது பல்வலி ஏற்படுகிறது. காலை மலம்கழித்தல் சிரமமாக உளது . எனக்கு ரத்த சர்க்கரை அளவு நூற்றிஐம்பது( உணவுக்கு முன்) அதற்க்கு நாட்டுமருந்து உட்கொள்ளுகிறேன். தாங்கள் இதனை சற்று கூர்நோக்கி இதனிடம் இருந்து விடுபட தகுந்த ஆலோசனை கூறுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . எண்தகு வயது ஐம்பதினாறு வருடம் . மிக்க நன்றி இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள சு.ஆதிமுத்து
 
17-Apr-2019 09:37:40 Dinesh said : Report Abuse
Recently i am affected by tongue wound continuously. It can't be recovered..I get confusing whether it is oral cancer or something
 
20-Jan-2019 16:58:50 Jeevitha said : Report Abuse
என் Husband வெளிநாட்டில் இருக்கார். அவங்களுக்கு நாக்கில் புண் அடிக்கடி வருது. கொஞ்ச நாள் சரியானமாரி இருக்கு திரும்பவும் வருது இதற்கு என்ன காரணம் என்ன மருந்து Plz Help பண்ணுங்க
 
30-Nov-2018 06:33:39 Krishnaveni said : Report Abuse
சார் எங்க வீட்டுக்காரருக்கு வாய் புண், தொடர்ந்து இருமல் நாங்கள் செக் செய்து பார்த்தோம் அப்போது டஸ்ட் அலர்ஜி என்று சொன்னாள்கள்.ஆனால் தொடர்ந்து இருமல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நான் எல்லா விதமான டாக்டர் சொன்ன மருந்து மற்றும் பழங்கள் காய்கறிகள் கொடுத்து வருகிறேன் ஆனால் குணாமவில்லை ஒரு சில நேரத்தில் இருமல் இல்லாமல் இருக்கும் மறுபடியும் இருமல் வந்து கொண்டேதான் இருக்கிறது .சார் தயவு செய்து இருமல் சரியாக உதவுங்கள்.
 
29-Jun-2018 11:45:22 முஹம்மது இக்பால் said : Report Abuse
எனக்கு அடிக்கடி வாய் புண் வருகிறது. புண் குணமாக என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்.
 
28-Jun-2018 03:59:20 rajivgandhi said : Report Abuse
Sir எனக்கு வாய்ல ரெண்டு pakkathulaum pun இருக்கு நாக்குல அடில புண் இருக்கு ஆனா அது வலி ஏதும் இல்லை பத்து மாசமா இருக்கு எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க பயமா இருக்கு
 
01-Apr-2018 15:19:03 ganesan said : Report Abuse
சார், எனக்கு நாக்குல 3 மாதமா புன்னுஇருக்க
 
22-Mar-2018 11:54:11 rajalakshmi said : Report Abuse
எனக்கு வாயின் உட்பகுதியில் மேலே புண் உள்ளது. நாக்கிலும் புண் உள்ளது மற்றும் வாயிலிருந்து அழுகிய முட்டை நாற்றம் வருகிறது . நான் என்ன செய்ய வேண்டும் . எனக்கு அல்சர் உள்ளது
 
14-Mar-2018 04:31:17 கஞசனா said : Report Abuse
vaai pun iruku sir.naaku erichal iruku 10 masama intha problem iruku. pallu erral problem iruku ethanala intha problem varuthu spicy food ethuvum sapda mudiyala pls reply me சார்
 
12-Mar-2018 07:44:21 punitha said : Report Abuse
சார், எனக்கு அடிக்கடி உதடு வாய் மற்றும் மூக்கில் நீர்க்கொப்பளங்கள் போன்றும் புண் போன்றும் வருகிறது உடம்பு சூடாகும் போதும் மாத்திரைகள் உட்கொள்ளும் போதும் இதுபோன்று வருகிறது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இந்த பிரச்னை வருகிறது ஏதாவது தீர்வு சொல்லுங்கள்
 
27-Nov-2017 16:53:37 மயில் அழகன் said : Report Abuse
அருமை மென் மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ..
 
15-Nov-2017 11:51:56 vivek said : Report Abuse
sir enakku oneside ulla arippu andha idathil chinna kattiya irukku 4 years ah irukku some time arikkum some arikkathu ennava irukkum
 
04-Dec-2016 06:37:39 rajkumar said : Report Abuse
Sir எனக்கு வாய்ல ரெண்டு pakkathulaum pun இருக்கு நாக்குல அடில புண் இருக்கு ஆனா அது வலி ஏதும் இல்லை பத்து மாசமா இருக்கு எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க பயமா இருக்கு
 
11-Jan-2016 19:59:50 seethapathi said : Report Abuse
திக்கி பேசுதலுக்கு என்னை செய்ய வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.