விழாக்காலங்களில் முருகப்பெருமான் அவருக்குரிய ஆடு, மயில் வாகனங்கள் தவிர, சிவனுக்குரிய ரிஷபம் மற்றும் ஐராவதம் எனப்படும் தேவலோகத்து
வெள்ளை யானையிலும் பவனி வருவார். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமென்பதால், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக, சுவாமி இவ்வாறு பவனி
வருவதாகச் சொல்கின்றனர். முருகன் அருள்பெற்ற இடும்பனும் இங்கு வாகனமாக இருக்கிறார். இவர் மீதும் சுவாமி பவனி செல்வார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை
நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது. பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை
இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். விசாலாட்சி
அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.இந்திரன், இங்கு கார்த்திகை முதல்
ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம்.
விழாக்காலங்களில் முருகப்பெருமான் அவருக்குரிய ஆடு, மயில் வாகனங்கள் தவிர, சிவனுக்குரிய ரிஷபம் மற்றும் ஐராவதம் எனப்படும் தேவலோகத்து வெள்ளை யானையிலும் பவனி வருவார். இந்திரன் வழிபட்டு அருள் பெற்ற தலமென்பதால், அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக, சுவாமி இவ்வாறு பவனி வருவதாகச் சொல்கின்றனர். முருகன் அருள்பெற்ற இடும்பனும் இங்கு வாகனமாக இருக்கிறார். இவர் மீதும் சுவாமி பவனி செல்வார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது. பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து, சம்பார் சாதம் அல்லது பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். |