இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தமாதாக்கள் சந்நிதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும்
சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது. இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம்.
பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.
அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு
எழுந்தருள்கிறாள்.புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.இத்தலத்து
முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள்
உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சப்தமாதாக்கள் சந்நிதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும். சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது. இறைவி அரூபமாக இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம்.
பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள். புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. |