LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தலை(Head)

உங்களுக்கு ஒற்றைத் தலைவலியா?

ஒன்றைத் தலைவலி பிரச்சனை தற்போது பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகள் இதோ.

 

நிம்மதியான தூக்கம் : பெரும்பாலும் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால், நல்ல தூக்கம் வரச் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, படுக்கப் போகும்முன் இளஞ்சூட்டில் பால் அருந்தலாம்.


உணவு முறையில் தேவை கவனம் : சரியான நேரத்தில் உணவு உண்ணாததும், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால், நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

 

மது, புகை, காபி தவிர்த்தல்: மது அருந்துதல், புகை பிடித்தல், காபி அருந்துதல் ஆகியவை சிலருக்குத் தலைவலியை ஏற்படுத்தும். இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். சிலருக்கு காபி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போலத் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.


உடற்பயிற்சி: உடற்பயிற்சி தான் உடலில் உள்ள வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.


சுற்றுச்சூழலில் கவனம்: கடுமையான வெயில், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமான சூழலில் வாழுவது ஆகிய சுற்றுச்சூழல் நிலைகளாலும் சிலருக்குத் தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.


கவலை, சோர்வு, மனஅழுத்தம்: அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.


தடுப்பு முறைகள் : ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்பட்டது என்று அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு உட்பட்டபோது தலைவலி ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற சூழலைத் தவிர்ப்பது நலம். சில பொருட்கள், வாசனைகள் 'அலர்ஜி'யாகி தலைவலியைக் கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளலாம்.


மருந்துகள்: அதிக அளவில் மருந்து எடுத்துக்கொள்வதும் சிலருக்கு தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


by Swathi   on 25 Apr 2014  6 Comments
Tags: Otrai Thalai Vali   One Sided Headache   தலைவலி   தலைவலி குணமாக   ஒன்றை தலைவலி        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு ஒற்றைத் தலைவலியா? உங்களுக்கு ஒற்றைத் தலைவலியா?
தலைவலியில் இருந்து விடுபட ஐந்து கை வைத்தியங்கள் !! தலைவலியில் இருந்து விடுபட ஐந்து கை வைத்தியங்கள் !!
கருத்துகள்
23-May-2017 10:16:01 Ramadass said : Report Abuse
Otrai talavali pookka vazhi
 
13-Oct-2016 09:53:22 durairaman said : Report Abuse
எனக்கு 10naatkalaga ஒருபக்கமாக தலைவலி வருகிறது மாத்திரை அடுக்கும்போது சரியாகி விடுகிறது பின்னர் நான் iravu தூங்குவது 12 agum காரணம் மதியம் nan தூங்கிடுவேன் நான் மெடிக்கல் ஷாப்ல வேலைபாக்றேன் thalaivaliku காரணம் என்ன காரணம் irukum
 
07-Nov-2015 16:25:23 abduljaleel said : Report Abuse
Email portrait Thalia vali vanthal thanga minerals mukku last water vantha paravala enna problem
 
07-Mar-2015 04:32:26 vanitha said : Report Abuse
ஒற்றை தலை வலி
 
05-May-2014 01:10:43 senthil said : Report Abuse
ஆண்மை அதிகரிக்கா என்னா பொருட்களை சாப்பிட வேண்டும்
 
26-Apr-2014 01:40:52 கே.Kavitha said : Report Abuse
சயன்ஸ் ப்ரொப்லெம் இருகுவாக ஒற்றை தலை வலி வந்தால் என்ன செய்வது அதற்கு ஒரு தீர்வு ,தயவு சொல்லுனாக ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.