சிங்கப்பூர் தேசிய நூலக ஆதரவோடு சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமை கழகத்தின் சார்பில் தமிழிசை மூவரின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
படத்தைச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.இராசாராம் அவர்கள் திறந்து வைக்க,புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் தலைமையுரையாற்ற,
நெடுஞ்செழியன் அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழிசை மூவர் என்ற தலைப்பில் முனைவர் மீனாட்சி சபாபதி சிறப்புரையாற்ற, வரலாற்று ஓவியங்கள் என்ற தலைப்பில் புதுவை ஓவியர் முனைவர் ரெ.இராசராசன் அவர்கள் அனுபவ உரையை வழங்க ஏற்பாட்டுக்குழுத்தலைவர் புருஷோத்தமன் துணைத்தலைவர் சிங்கப்பூர்வாழ் சீர்காழி செந்தில் நெறிப்படுத்த விழா இனிதே நிறைவுற்றது.
|