முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை நேற்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 1995 ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது சோதனைகள் நடத்தப்பட்டு பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் ஒடிசா மாநிலம், பாலாசூரில் உள்ள, ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, நேற்று முன் தினம் விண்ணில் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பினாகா ராக்கெட் லாஞ்சர் ராணுவத்தில் பீரங்கிக்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது என்பது குறிப்பிட தக்கது.
|