அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருப்பது சிறப்பு.அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள
சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காளசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம்
வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி
அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை
வணங்கி வரலாம். கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வங்கள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை
செய்யப்பட்ட நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் சிதைக்கப்பட்டது. ஆனால், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற
திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர்.
அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருப்பது சிறப்பு. அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காளசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம்.
சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம். கோயில் சுற்றுச்சுவரிலுள்ள தெய்வங்கள் பெரும்பாலும் சிதைந்துள்ளன. முற்காலச் சோழர் காலத்தில் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நந்தி, பிற்காலப் படையெடுப்புக்கள், சூறையாடல்களால் சிதைக்கப்பட்டது. ஆனால், நந்தியின் தலை மட்டும் மிஞ்சியது. இந்தத் தலையை தென்புற திருச்சுற்று சுவரில் பதித்து வைத்துள்ளனர். |