|
|||||
சின்ன வெங்காயத்தின் சிறப்பான பயன்கள் !! |
|||||
மருத்துவ உலகைப் பொறுத்த வரை பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். என்றும் இளைமையோடு இருக்க : சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது நல்லெண்ணையில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம். உடல் சூட்டைக் குறைக்க : சின்ன வெங்காயம் உடல் சூட்டைக் குறைக்க வல்லது. பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டமும் சீராகும். இன்சுலின் சுரக்க : கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது. பித்த திரவம் இயல்பாக சுரக்க : கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். |
|||||
by Swathi on 04 Oct 2014 11 Comments | |||||
Tags: சின்ன வெங்காயம் இளமையோடு இருக்க இன்சுலின் சுரக்க உடல் சூடு தனிய பித்தம் குறைய Small Onion Chinna Vengayam Benefits | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|