|
||||||
தமிழ் பிறந்தநாள் பாடல் குறித்து சுப.வீ. அவர்களின் உரை |
||||||
இன்னும் ஆங்கிலத்தில் "ஹேப்பி பர்த்டே" பாடி பிறந்தநாள் கொண்டாடும் தமிழர்களும், சின்னத்திரை தொடர் இயக்குநர்களும் , திரைப்பட இயக்குநர்களும் "நீண்ட நீண்ட காலம்.. நீ நீடு வாழ வேண்டும்" என்று மக்கள் ஏற்றுக்கொண்டு உலகெங்கும் பாடிவரும் பாடலை பயன்படுத்துங்கள்.. தமிழ் வாழ்வியலில் தமிழைப் பயன்படுத்துவோம்.. தமிழ்நாட்டுத் தமிழ் பாடநூலில் ஆறாம் வகுப்பில் இடம்பெற்றுள்ளது, சிங்கப்பூரின் சிறுவர் அருங்காட்சியகத்தில் உலகில் இதுவரை பல மொழிகளில் வெளிவந்துள்ள பிறந்தநாள் பாடல்களில் தமிழும் இடம்பெற்றுள்ளது, 10000 பேருக்கு மேல் தமிழ் படிக்கும் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் (ATA) பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. வலைத்தமிழ் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல தமிழ்ப்பாடத்திட்டங்களில் இடம்பெற்று நிலைத்து நிற்கிறது.... பிறந்தநாளைத் தமிழில் கொண்டாடுவோம்.. பன்னாட்டு வாழ்வியல் சூழலில் பிறமொழிகளில் தாக்கங்களைத் எதிர்கொண்டு எம் இளையதலைமுறை திசைமாறிவிடாமல் எம் தமிழ்மொழி என்றும் எழுந்து நிற்கும்.. தொடர்ந்து வாழ்வியலை தமிழ்ப்படுத்துவோம்...
பாவலர் அறிவுமதி எழுதி வலைத்தமிழ் தயாரிப்பில் வெளிவந்த தமிழ் பிறந்தநாள் பாடல் -சுப.வீ. அவர்களின் உரை காணொளியில் கீழே..வாழ்க தமிழ்... பயன்படுத்துவோம்.. பகிர்வோம்.. பரப்புவோம்..
More details on this topic with video , audio and phots: https://www.valaitamil.com/tamilbirthday/ |
||||||
by Swathi on 14 Mar 2024 0 Comments | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|