கவிஞர் அறிவுமதி எழுத்தில், வலைத்தமிழ் தயாரிப்பில் உருவான தமிழ் பிறந்தநாள் பாடல் சிங்கப்பூர் சிறுவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளதை அறிவோம். அதை நேரில் பார்வையிட அருங்காட்சியகத்தின் மேலாளர் திரு.லியோனல் லியோங் அழைப்பின்பேரில் வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி ஏப்ரல் 19, 2024 அன்று நேரில் சிங்கப்பூர் சென்று பார்வையிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பின் அடிப்படையில் இப்பாடல் தொடர்ந்து இடம்பெறக் கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இதை எவ்வித கட்டுப்பாடும் , கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்த வலைத்தமிழ் அனுப்பியிருந்தது.
தற்போது சில கட்டுமான பணிகள் முடிந்தபிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.
|