LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF
- அத்திலி புத்திலி தொடர்

அத்திலி புத்திலி - அறிமுகம்

விளையாட்டு என்பது விரும்பி ஆடும் ஆட்டு...
அதாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்று பொருள் படும்.

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா என்றார் பாரதி.

நாமும் நமக்கு பிடித்தமான இந்த பாடல் வரியை நம் குழந்தைகளை மனப்பாடம் செய்யச் சொல்லி மேடை தவறாமல் பாடச் சொல்லி ரசித்து மகிழ்கிறோம். "நிற்க அதற்குத் தக" என்னும் திருவள்ளுவரின் வரிக்கு ஏற்ப நாம் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறோமோ அல்லது விளையாடுவதற்கான சூழலைப் பிள்ளைகளுக்கு உருவாக்கித் தருகிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி !

தமிழர் தம் உணவுகளின் சிறப்பைப் போலத் தமிழர் விளையாட்டுக்களும் சிறப்பு வாய்ந்ததும் போற்றக்கூடியதும் ஆகும். மாறி வரும் காலச்சூழலில் நம்முடைய கல்விமுறை என்பது வளரும் குழந்தைகளை இயந்திரமாக்கி வைத்திருக்கின்றது. இங்குப் பாட நூல்களில் உள்ளதையும் ஆசிரியர்கள் கூறுவதையும் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வளர்ந்து வருகிறது. கேட்டு, பார்த்து, உணர்ந்து கற்றல் இங்கு முற்றிலுமாக இல்லை. ஒழுக்கம், கட்டுப்பாடு என விதிக்கப்படும் விதிமுறைகளில் மாணவர்களின் சுய சிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றது. இவற்றை மாற்றி வாழ்வியலோடு நமக்கான பாரம்பரியங்களைக் கற்பது நம் கல்வியைத் தாண்டி வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையை உருவாக்கும்.

தமிழகத்தில் தமிழர்களுக்கே தங்களின் பாரம்பரியங்களையும் அடையாளங்களையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது வேதனையளிக்கின்றது.

பரந்து விரிந்த இந்த உலகத்தில் குழந்தைகளுக்கான உலகத்தை நான்கு சுவற்றிற்குள் சுறுக்கி வைத்திருக்கின்றோம்.

வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் கல்வியின் அவசியம் உணராமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

மரபு சார்ந்த அறிவு, பண்பாட்டின் அடையாளங்களங்களை எடுத்துரைக்கும் தமிழர்களின் பல களத்தைப் பயிற்றுவிக்க நாம் ஆர்வம் காட்ட வேண்டும். உண்மையில் குழந்தைகளுக்கான உலகத்தை நாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறுகின்றோம். மதிப்பெண் கல்வியை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அதன் மூலம் அவர்களை எளிதில் தாழ்வு நிலைக்குக் கொண்டு செல்கிறோம்.

மதிப்பெண் தாண்டிய அறிவு என்பது உழவு, உணவு முறை, மருத்துவம், வீரம், கலை, விளையாட்டு, பாடல் வழி, கதை வழி, கானக வழி என விரிந்து கொண்டே போகும்..! இவ்வழிக்கல்வியைக் குழந்தைகள் விரும்பி கற்பார்கள் என்பதினால் கற்றது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

அத்தகைய ஒரு கல்வி முறையாகவே நான் விளையாட்டைப் பார்க்கிறேன்.

நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற

நூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை வெறும் விளையாட்டாக மட்டும் அணுகாமல் அதன் பலன் அறிந்து பயிற்சியாகப் பிள்ளைகளை அதில் ஈடுபடுத்தி பலன் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். தற்போதைய காலகட்டத்தில் கணினியிலும் தொலைக்காட்சியிலும் கைப்பேசியிலும் விளையாட்டுக்களைச் சுருக்கி யாரோ விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் நம் பிள்ளைகள். நம் சிந்தனையைத் தூண்டி, உறவை மேம்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் நம் மரபு விளையாட்டுக்களை நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அவசியம் கற்றுத்தர வேண்டும்.

மனக்கணக்கை கற்றுத் தரும் பல்லாங்குழி , கவனத்தை அதிகரித்து சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் புத்தியை வளர்க்கும் தாயம் விளையாட்டு, மனதை ஒருமுகப்படுத்தும் நூற்றாங்கல் விளையாட்டு, உடலையும் மனதையும் ஒருமிக்கும் பாண்டி விளையாட்டு , கவனத்தை அதிகரிக்கும் சொட்டாங்கல் ,தனக்கு நிகரான ஆளோடு போட்டிப்போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் மாதங்களை மனப்பாடம் செய்ய வைக்கும் பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு, நண்பர்கள் சிக்கலில் இருக்கும் போது கை கொடுத்து அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும் ஜோடி புறா விளையாட்டு என்று நீளும் விளையாட்டு பட்டியலில் ஒவ்வொரு விளையாட்டும் உளவியல் ரீதியாகப் பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வரும் ஒன்றாகும்.

"எப்ப பாரு செல்லயே நோண்டுறான்னு..." சொல்லும் அம்மாக்களுக்கு ஏற்கனவே World Health Organisation (WHO) என்று சொல்லக்கூடிய உலக சுகாதார மையம் Game Addiction என்பதை ஒரு மன நல ஆரோக்கிய குறைபாடாக அறிவித்து எச்சரித்திருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு குழந்தை காணொளி விளையாட்டுகளை (Vi) பார்ப்பதினால் உண்டாகும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு Stage 1, 2, 3 என்று பிரித்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறைகளும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விசயமாகும். இன்றைய விளையாட்டுகளின் வகைமைகள் ஒரு குழந்தையைச் சிகிச்சை வரை கொண்டு செல்வதை எளிதில் கடந்துவிட முடியாது.

அவ்வாறு தொடர்ச்சியாக ஒரு குழந்தை இயந்திரத்தோடு மட்டுமே உறவாடிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் நிறைந்த பிள்ளைகளாக மட்டுமே அவர்கள் உருவாகுவார்கள். இயந்திரத்தை மட்டுமே கையாள தெரிந்த குழந்தைகள் உயிர்களையும் உணர்வுகளையும் கையாள தெரியாத குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்பதே வேதனையான உண்மை.

மேம்போக்காக வெறும் விளையாட்டு என்று ஒதுக்கி விடாமல் அதனை உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக அணுகியதால் மட்டுமே நம் பாரம்பரிய தமிழ்க் கலாச்சாரங்களில் ஒன்றிவிட்ட மரபு விளையாட்டுகளைத் தமிழன் போற்றிப் பாதுகாத்துவந்திருக்கிறான். காலச்சூழலில் அவற்றை நாம் தெரிந்தோ, தெரியாமலா மறந்துவிட்டோம். அவற்றை வெளியுலகிற்குக் கொண்டுவருவதே இத்தொடரின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தமிழ் மரபு விளையாட்டுகள் ஒவ்வொன்றும் இனி உங்கள் கைகளுக்கு வந்து சேரும்... பயணிப்போம் மகிழ்வோடு....


நன்றி
மு.பிரீத்தா நிலா கணேஷ்

by Swathi   on 19 Mar 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
வதந்தி வதந்தி
கருத்துகள்
22-Mar-2019 14:30:50 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.சரியான தருணத்தில் சரியானவிஷயத்தைசொன்னீர்கள்.குழந்தைகள் எந்தஒஒன்றையுமேபார்த்து,கேட்டு, புறிந்து கொண்டால் அஅதைவிட சிறப்பான கல்வியிருப்பதாக எஎனக்குதோன்றவில்லை.அஅதே போல விளையாட்டுக்ககள் வீட்டை விட்டுவெளியேவந்து, நாலு குழந்தைகளுடன் கூடி விளையாடுவதாக இருக்க வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.