புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்களின் பதில்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி,
“திருநள்ளாரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கல்லூரி அமைப்பதற்கான பணி துவங்கப்படும்”. எனத் தெரிவித்தார்.
மேலும், “புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயர்ப் பலகையைக் கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும். அதேபோல் அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். .
|