|
||||||||
ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்- புதிய தொடர் ஆரம்பம் |
||||||||
![]() வலைத்தமிழில் புதிய தொடராக, "ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்" என்ற தொடர் வெளிவருகிறது.
முதல் நாடாக "தமிழ்-கொரிய தொடர்பு" குறித்து அடுத்த சில வாரங்கள் பார்க்கவிருக்கிறோம். இத்தொடரில் இதுவரை பல்வேறு ஆய்வுகள் செய்துள்ள,நூல்கள் எழுதியுள்ள, தொடர்ந்து பேசிவரும் பல ஆளுமைகளை நேர்காணல் செய்து பகிரவிருக்கிறோம். அடுத்தடுத்து பல நாடுகளுடன் தமிழுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பார்க்கவிருக்கிறோம்.
இதை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த பொருத்தமான ஆளுமையாக தமிழ்மொழி உறவுகள் குறித்து பேரார்வம் கொண்டு தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் ஹாங்காங் முனைவர்.சித்ரா அவர்கள் முன்வந்துள்ளார். இது எதிர்காலத்தில் அனைவரும் பெருமைப்படும் நிகழ்வாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்நிகழ்ச்சியை அனைவரும் கண்டு, கேட்டு, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து ,குறைகளை சுட்டிக்காட்டி, நிறைகளை பாராட்டி, அந்தந்த நாட்டில் வசிக்கும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் அந்தந்த மொழியில் தமிழ் தொடர்பு குறித்து ஆய்வுசெய்தவர்களை அறிமுகப்படுத்தி உதவிடவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
முதல் நிகழ்ச்சியில் இதுகுறித்து கொரியாவில் வாழ்ந்து , ஆய்வுசெய்து பல ஆண்டுகளாக தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் ஆய்வாளர் முனைவர். நா. கண்ணன் அவர்கள் நம்மோடு வரும் 26ம் தேதி இணைகிறார்.
அதற்கு முன்பு இதன் நோக்கவுரையாகவும் , நிகழ்ச்சி அறிமுகமாகவும் வலைத்தமிழ் ஆசிரியரும் , முனைவர்.சித்ரா அவர்களும் ஒரு காணொளிப்பதிவு செய்து வெளியிடுவார்கள்.
நிகழ்ச்சியை www.ValaiTamil.TV , ValaiTamil, www.YouTube.com/ValaiTamil ஆகியவற்றில் காணலாம்.
தொடர்பில் இணைந்திருக்க :https://www.youtube.com/ValaiTamil?sub_confirmation=1
-வலைத்தமிழ் ஆசிரியர் குழு
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 22 Oct 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|