LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- துபாய்

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!!

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 11ஆம் தேதி தொடங்கி எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. வரும் 11-ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும்.

இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள் தங்களது மொழி சார்ந்த இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மொழியில் இந்த ஆண்டு இலக்கிய ஆளுமையாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டு சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடனான வாசகர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. அவரது துணையெழுத்து என்ற நூல் இந்த நிகழ்ச்சியின் கருவாக அமைக்கப்பட்டிருந்தது.

அவர் தனது உரையில் தன்னை இந்த புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் வாசகர்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். தன்னை அடையாளம் காட்டும் வகையில் பிரபல வார இதழில் வெளியான துணையெழுத்து மிகவும் முக்கியமாக இருந்தது. இது பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. அந்த நூல் இதுவரை 35 பதிப்பை கண்டுள்ளது. தொடர்ந்து இந்த நூலின் விற்பனை அதிகரித்து வருகிறது.

தன்னை ஒரு சீரியசான எழுத்தாளர் என்ற அடையாளத்தை இந்த கட்டுரை மாற்றியமைத்தது. இதில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டியிருந்தேன். அது பலரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது.

தமிழ் இலக்கியத்துக்காக பாடுபட்ட கம்பர், சீத்தலைச் சாத்தனார், மாங்குடி மருதன்  உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியத்துக்காகவே தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் எங்கு இருந்தார்கள், எங்கு மறைந்தார்கள் என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெள்ளி வீதியார் என்ற பெண் காதல் கவிதைகளை சிறப்புடன் எழுதி வந்தவர். அவர் குறித்த தகவல்களை இலக்கிய உலகம் மிகவும் அரிதாகவே தெரிய முடிகிறது.

வரலாறு, மொழி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருவது தமிழ் இனம் ஆகும். தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது.

செய்தித்தாள்களில் மருத்துவ உதவி கேட்டு வரும் விளம்பரங்களை பார்த்து சாமான்யர்கள் சிறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெரிய அளவிலான உதவிகள் சென்று சேர முடியாவிட்டாலும், அந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காவலாளி உள்ளிட்ட சிறு வேலைகளை செய்து வருவது தனது எழுத்துக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும்.

ஒரு சிறு உதவி செய்தாலும் அதனை நன்கொடையளிப்பவர்கள் தங்களது பெயரை அந்த பொருளில் பதிப்பவர்களுக்கு மத்தியில் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மன்னர்களின் சேவைகள் மிகவும் பெருமைக்குரியது ஆகும்.

எனது வாழ்வை  ஒரு எழுத்தாளனாக மட்டுமே அமைத்துள்ளேன். பலர் அரசு அல்லது அவரவரது விடுமுறைகளை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.

 

மேலும் இந்திய வரைபடத்தை பார்த்த நான் அந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. இதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கம்பம் தினேஷ், மதுரை அக்மல் ஹசன், காரைக்குடி ஹமீத் உள்ளிட்ட வாசகர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

by Swathi   on 07 Nov 2017  0 Comments
Tags: எஸ். ராமகிருஷ்ணன்   தமிழக எழுத்தாளர்   Sharjah Book Fair   Tamil Writter   S Ramakrishnan        
 தொடர்புடையவை-Related Articles
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!! ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.