|
|||||
இயல்-இசை-நாட்டியம்-நாடகத்தில் சிறந்த சாதனை படைத்த கலைஞருக்கு 10 லட்சம் பரிசு |
|||||
![]()
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
தமிழகச் சட்டப்பேரவையில் கலைப் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது இதைத் தெரிவித்தார். மேலும் அவர் "அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும். தமிழ்நாடு முனைவர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்தப் புதிய செயலி உருவாக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சியக வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் மூத்த பார்வையாளர்கள், சிறுவர்களுக்காக இரண்டு மின்கல வாகனங்கள் இயக்கப்படும். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். தமிழகச் சட்டப்பேரவையில் கலைப் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியபோது இதைத் தெரிவித்தார். மேலும் அவர் "அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும். தமிழ்நாடு முனைவர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்தப் புதிய செயலி உருவாக்கப்படும்.சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சியக வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் மூத்த பார்வையாளர்கள், சிறுவர்களுக்காக இரண்டு மின்கல வாகனங்கள் இயக்கப்படும். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 18 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|