LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

கடுக்காயின் மருத்துவ குணங்கள் !!

நாட்டு மருந்துகளில் ஒரு மிகச்சிறந்த மருந்து, கடுக்காய். கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. 


கடுக்காயின் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாதத்தில் துளிர் விடும். 


இந்த மரத்தின் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். 


சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும். நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது. விசத்தன்மை கொண்டது. 


கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.  கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன. மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன. புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். 


கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைத்தாலும், அது கெடவே கெடாது.


சித்தர்கள் பாடல்களில் கடுக்காய்: 


"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு


மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்


விருத்தனும் பாலனாமே.'


காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து. 


கடுக்காயின் மகத்துவங்கள் :


பக்கவிளைவுகளை குறைக்க :


கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்திற்கு பெயர் திரிபலா. இந்த மருந்தை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துக்கள் நிறைய உட்கொண்டதால் ஏற்படும், பக்க விளைவுகளைக் குறைக்க இந்த மருந்து உதவுகிறது.  


உடல் வலிமை பெற :


நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை - இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.


பல் நோய்கள் தீர :


கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.


மூல எரிச்சல் தீர :


கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.


ஜீரண சக்தி அதிகரிக்க :


மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.


இருமல் குணமாக :


கடுக்காய்த் தோல், திப்பிலி சம எடை எடுத்து இடித்து தூள் செய்து 2 கி. தூளை தேனில் சேர்த்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.


வாதம், பித்தம் குணமாக :


கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.


தலைவலி குணமாக :


வேப்பம்பட்டை , கடுக்காய் (கொட்டை நீக்கியது), கோரைக்கிழங்கு, நிலவேம்பு சம எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு 400 மி.லீ. நீர் விட்டு பாதியாக சுண்டுமளவுக்கு காய்ச்சி ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் தேன் கலந்து சாப்பிட தலைவலி குணமாகும்.


உடல் எடையைக் குறைக்க :


கடுக்காய்த் தோல், தான்றித்தோல், நெல்லி வற்றல் சம எடை எடுத்து சுத்தம் செய்து இடித்து வஸ்திரகாயஞ் செய்து அதில் 1/2 தே. கரண்டி அளவு கொள்ளுக் குடிநீருடன் காலை, மாலை என இருவேளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.


கரப்பான் நோய்க்கு (எக்ஸிமா)


கடுக்காய்த் தோலை சூரணித்து 1/2 தே.கரண்டி காலை, மாலை பாலுடன் உட்கொண்டு அச்சூரணத்தையே வெந்நீரில் கலந்து உடலில் பூசி ஸ்நானம் செய்து வந்தால் குணமாகும். 


இளநரை மறைய :


பிஞ்சு கடுக்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை... மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக இடித்துக் கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். 


தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாகத் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இந்த `கடுக்காய் தைலக் குளியலை' கட்டாயம் செய்து பாருங்கள், இளநரை ஓடியே போவதுடன், முடியும் கறுமையாக மாறிவிடும்.

by Swathi   on 12 Sep 2014  62 Comments
Tags: Terminalia chebula   Kadukkai   கடுக்காய்              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?
கடுக்காயின் மருத்துவ குணங்கள் !! கடுக்காயின் மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
03-Nov-2019 09:45:03 Anusuya said : Report Abuse
Can feeding mother eat கடுக்காய் பொடி ?
 
06-Sep-2019 15:01:06 Kavi said : Report Abuse
I am 40 yrs old. Kadukkai paste thalaiku apply pannum podhu hair dry aakumaa, hair fall aakumaa?. White hair athigamaga irukkirathu pls solution sollunga. Eppadi follow pannanumnu sollunga.
 
24-Jul-2019 11:26:10 Rk said : Report Abuse
மனக்கோளாறு காரணமாக பல வருடங்கள் ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் இரவுமருந்திற்கு முன்பாக கடுக்காய்பொடி அல்லது திரிபலா சாப்பிடலாமா எந்த முறையில் எடுத்துக்கொள்வது?
 
16-Apr-2019 18:41:40 ஷாஹுல் Hameed said : Report Abuse
எப்பவும் பசி இருந்து கொண்டே இருக்குறது . உடல் எடை கூடவில்லை . முதலில் இதை பதிந்த ஆளு செய்து சாப்பிட்டு பார்த்து விட்டு போடவும் .இந்த பதிவை போடவும்
 
04-Nov-2018 09:34:11 gomathirasu said : Report Abuse
அருமையான விஷயங்கள் சொன்னதற்கு நன்றி
 
29-Sep-2018 17:45:03 Brindha said : Report Abuse
Pregnant ladies kadukai sapidalama?
 
29-Jun-2018 08:23:10 Jeevanandham said : Report Abuse
excellent.
 
31-Jan-2018 03:28:34 Jagaraj said : Report Abuse
I have undergone heart bypass surgery and on following medications- Asprin 100mg, Bisoprolol 2.5mg, Rosucard Sanofi 20mg and Candesartan Cilexetil. Can I take kadukka with the above medicine? If so what is the right time. Inspite of these medicines I am still trying to control my cholesterol. Your advice will be appreciated. Thank you for the service Jagaraj.
 
21-Jan-2018 10:20:26 Vijayakumar said : Report Abuse
கடுக்காய் தூள் சாப்பிட்டால்ஆன்மை குறைவு ஏற்படுமா?
 
17-Jan-2018 17:27:09 Priya said : Report Abuse
Can we eat kadukai powder during breastfeeding?
 
28-Nov-2017 09:29:13 SELVARAJ said : Report Abuse
கடுக்காய் சாப்பிட்டால் ஆண்மை குறைவு வரும் என்கின்றனர் இது உண்மையா ,இல்லையா
 
23-Nov-2017 11:50:39 V Nagarajan said : Report Abuse
ஸ்ரீ பிரேமானந்தா says? இப் யு டேக் 1 டிஸ்பூன் full of கடுக்காய் இன் தி நைட் தென் இட் ஈஸ் equal டு doing 2 hours ஆப் pranayama .
 
22-Nov-2017 16:33:10 Kavi said : Report Abuse
கடுக்காய் பாலூட்டும் தாய் உன்னலாமா?
 
10-Oct-2017 06:12:15 anbu said : Report Abuse
கடுக்காய் எந்த மண்ணில் வளரும்.
 
25-Sep-2017 18:35:52 Murugan said : Report Abuse
ஹாய் டியர் Keerthana for skin disease use kovaikkai leaves mix with ghee and apply the affected area regularly for few days..u will find better results.. For more information மெயில் murugesh 0102@gmail.com
 
09-Aug-2017 13:47:09 thiru said : Report Abuse
கடுகையில் உள்ள கொட்டையை சாப்பிடலாமா ? கொட்டை உடலுக்கு நல்லதா ?
 
19-Jul-2017 11:39:44 SAMPATH said : Report Abuse
கடுக்காய் பொடி சாப்பிட்டால் ஏதாவது பக்க விளைவுகள் உண்டாகுமா ?
 
02-Jul-2017 03:22:39 Kumaran said : Report Abuse
கடுகை நோ சைடு எபக்ட்ஸ்
 
03-Jun-2017 05:57:45 v arunkumar said : Report Abuse
narmbu matrum vindhu anukkal valarchi pera malachikkal thiera kadukkai sappidalama
 
14-May-2017 20:11:40 செந்தில் kumar said : Report Abuse
குட் மெடிசின் டெய்லி ஈட்டிங் ஹாப்பி
 
13-May-2017 21:23:42 Rajendran said : Report Abuse
Kadukkai podi eppadi seivathu? Pls send details how to make kadukkai podi
 
26-Apr-2017 06:08:30 Keerthana said : Report Abuse
Skin disease cure aguma pls solunga
 
02-Apr-2017 08:42:19 ஜி.மணிவண்ணன் said : Report Abuse
கடுக்காய் தினந்தோறும் சாப்பிடலாமா?
 
02-Apr-2017 08:40:16 ஜி.மணிவண்ணன் said : Report Abuse
கடுக்காய் சாப்பிடுவதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா ?. ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் கூறுகின்றனர் கடுக்காய் சாப்ப்பிடுவதால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று . அவர்கள் சில மலையாள சினிமா பார்த்து தெரிந்து கொண்டதாக கூறுகின்றனர் . சில நபர்கள் கூறியதாக கூறினார் . இது தொடர்பாக சரியான விளக்கத்தை அளிக்குமாறு வேண்டுகிறேன் . இந்த கூற்று உண்மையா?
 
30-Mar-2017 10:24:12 xxxx said : Report Abuse
கடுக்காய் கொட்டைகள் நச்சுதன்மை வாய்ந்தவை. ஆகவே கொட்டை நீக்கி தான் உண்ண வேண்டும்
 
07-Mar-2017 22:49:26 வ. அண்ணாமலை said : Report Abuse
கிட்னி பிரச்சனைக்கு கடுக்காய் சாப்பிடலாமா. என்னக்கு நீர் கடுப்பு உள்ளது. எதை எடுக்கும் வழிமுறைகள் என்ன. டைவு செய்து விரிவான பதில் சொல்லவும் .
 
02-Mar-2017 14:51:48 முருகன் said : Report Abuse
இரவில் கடுக்காய் எட்டுக்கும் பொது ஆல்கஹால் எடுக்கலாமா ? நன்றி
 
23-Feb-2017 11:04:00 ganesh said : Report Abuse
இ வாண்ட் டு கடுக்காய் pleas contact டு என்னோட number 7200817749 enaku kadukkai தேவைப்படுகிறது thodarpukollavum
 
02-Feb-2017 05:41:42 sanjeevi said : Report Abuse
எனக்கு தலைவலி
 
29-Jan-2017 07:49:42 ranga said : Report Abuse
Very nice. YOU want kadukkai contact (09585244126)
 
10-Nov-2016 02:59:06 Selvakumar said : Report Abuse
I am from Malaysia . I have few question about kadukkai . Please send your email or Mobil number for me to contact . This is my mobil number +60173197740.
 
06-Nov-2016 09:10:14 Mahendran said : Report Abuse
Sir namasthe. Himalaya confido tablet use panna side effect irukuma sollugal iyya
 
18-Oct-2016 06:00:37 selvakumari said : Report Abuse
மூல நோய்க்கு கடுக்காய் பொடி சாப்பிட்டால் சரி ஆகுமா எனக்கு இந்த பிரச்ச்சாய் இருக்கு கடந்த 4 வருடங்கலாக தீரிவு சொலுங்களே எதனால் எனக்கு உடல் எடை அதிகரிக்க matenthuuu
 
09-Oct-2016 21:50:09 ratah said : Report Abuse
ப்ரேகண்ட் லட்டி கேன் எஅட் காட்டுகை
 
07-Oct-2016 21:41:48 asha said : Report Abuse
Kadukkai podi yeththanai vayathil irunthu sapidalam 12 vayathu kuzhanthaikku kodukkalama?
 
08-Sep-2016 00:35:50 ratah said : Report Abuse
கடுக்காய் மலசிக்கல் குணம்படுத்தலாமா
 
25-Aug-2016 09:10:03 பாஸ் said : Report Abuse
அற்புதம்!!!!!!!மகிஷ்ச்சி
 
16-Aug-2016 21:54:07 Dhivya said : Report Abuse
Fissure epadi natu mauthuvam kondu cure seivathu?
 
10-Aug-2016 09:37:35 prem said : Report Abuse
Aankalukku paaliyal sammamdhamana pirachanaihalukku kadukkai moolam theervu unda
 
13-Jun-2016 04:25:00 thaseen said : Report Abuse
How to eat kadukkai powder to mix water r milk
 
26-May-2016 07:01:18 சபரி லட்சுமணன் said : Report Abuse
உடம்பு வலி ,உடல் சூடு குறைய,மல சிக்கல்,மூல நூயி குறைய ஏதானும் மறுத்துவ குறிப்பு உண்டா
 
25-May-2016 05:46:13 மாலதி krishnamurth said : Report Abuse
டியர் சார்/மாம், இ அம தகிங் ஆயுர்வேதிக் ற்றேஅத்மேன்ட் பிரோம் 2012 ஒன்வர்ட்ஸ். லாஸ்ட் 2 மோந்த்ஸ் பாசக் இ வாஸ் அட்மிட்டேத் இன் தி ஹோச்பிடல் போர் தி ச்வேல்லிங் ஒப் கனி பார்ட் இன் போத லேக்ஸ் பே டு வாதம். கேன் யு அட்வைஸ் மீ, இப் இ டேக் எ ஸ்பூன் ஒப் கடுக்காய் பொடி, வ்ஹெதேர் வோர்தப்ளே போர் மி ஹெஅழ்த். இ அம இன் 5'8" அண்ட் நொவ் மி வெயிட் இச் 86.5 kg . my ஏஜ் இச் 53. இப் யு அட்வைஸ் டு கிவ் டிப்ஸ், வெள் அண்ட் இம்ப்ரோவே மி ஹெஅழ்த் புர்தெர். தேங்க்ஸ்.
 
29-Apr-2016 01:35:42 ரங்கசாமி R said : Report Abuse
வெரி குட் .நாங்கள் கடுக்கை வியாபாரி . உங்களுக்கு கடுக்காய் வேண்டும் என்றால் phone பண்ணுங்க .9585244126
 
11-Mar-2016 01:52:25 Suguna said : Report Abuse
இஸ் இட் குட் போர் ஹார்ட் படிஎண்ட். ஹொவ் டு டேக் கடுகை பவுடர். இச் கடுகை கேன் கிரே பிளேஸ்? ஹொவ் டு டேக்? ப்ளீஸ் அட்வைஸ். த தங்க யு.
 
27-Jan-2016 11:00:24 மணிமாறன் said : Report Abuse
வெரி குட்....
 
30-Dec-2015 01:13:14 த முரளிக்ரிஷ்ணன் said : Report Abuse
அருமை arumai
 
26-Nov-2015 02:40:22 பரசுராமன் V said : Report Abuse
தேங்க்ஸ் போர் யுவர் டிப்ஸ். Thanks for valuable guidance .
 
22-Nov-2015 11:22:35 shrimathi said : Report Abuse
Thanks for the very useful information. Please guide me I.e, how to make kaddukkai powder.
 
12-Oct-2015 09:40:13 செல்வம் said : Report Abuse
தங்களின் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக மிக நன்றி ,,,
 
15-Sep-2015 03:38:49 Nantrikal said : Report Abuse
உஸ் புல் மெசேஜ். சித்த மேடிசன் வளர்க.
 
27-Aug-2015 03:40:39 A. Robert said : Report Abuse
Very useful information for every household
 
21-Aug-2015 04:39:17 babu said : Report Abuse
I took valaithandu juice with ginger juice continuously 48 days, aftera month period i took 1/2 teaspoon kadukkai powder with water in early morning. but i have sugar and my total body will collapsed. how to rectify
 
09-Jul-2015 02:40:54 த.ராஜேந்திரன் said : Report Abuse
சிறப்பாக இருக்கிறது
 
19-May-2015 23:24:19 thangamani said : Report Abuse
Nan thinamum 2 kadukkai kottaikalai oru sempu neeril oora vaithu kalai verum vayiril kudikiren Ithu nallatha kettatha sollungal
 
09-May-2015 22:59:53 SELVARAJ CHINNAPPAN said : Report Abuse
avalubal kadki in 7 ooo kg
 
21-Apr-2015 09:10:12 ganesan said : Report Abuse
கடுக்கை nalla மருத்துவம் udayathu
 
19-Apr-2015 22:25:40 nithya said : Report Abuse
வெரி உசெபிஉல் டிப்ஸ் தேங்க்ஸ் எ lot
 
06-Apr-2015 08:23:35 Vasanthi said : Report Abuse
Very very useful tips ,
 
15-Mar-2015 02:50:26 vallalarherbals said : Report Abuse
Sutthi seitha mulikai available like kadukkai Thiribhala thirikadukam thuthuvalai herbals tea. சுக்கு No.1Quality white pepper and black pepper mail id: vallalarherbals@gmail.com Call:09840272455
 
15-Mar-2015 02:32:48 arumugam said : Report Abuse
Mikka Nantri
 
15-Mar-2015 02:32:45 arumugam said : Report Abuse
Mikka Nantri
 
16-Dec-2014 09:30:19 Saran said : Report Abuse
Super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.