|
|||||
கங்கை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் மரணம்! |
|||||
![]() கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் மரணம் அடைந்தார். ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சுவாமி ஞானஸ்வரூப் சனந்த். இவர் கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும், பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். வலுக்கட்டாயமாக அவர் ஆசிரமத்தில் இருந்து தூக்கி வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார். கங்கை நதியின் குறுக்கே அமைக்கப்படும் மின் திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்த சனந்த், கங்கை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதி வாரிய உறுப்பினராக இருந்த ஞானஸ்வரூப் சனந்த், 2010-ம் ஆண்டில் பகிராதி நதியின் குறுக்கே அமைக்க திட்டமிடப்பட்ட மின் திட்டத்தை எதித்து 38 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது போராட்டத்தை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 2011-ம் ஆண்டில் கங்கை நதியின் குறுகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், சுவாமி நிகமானந்த் என்பவர் 2 மாதமாக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
![]() |
|||||
by Mani Bharathi on 13 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|