மும்பை உயர்நீதிமன்றப் பதிவாளார் எஸ்.பி. சுக்ரே அனைத்து மாவட்ட கோர்ட்டுகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் உள்ள விவரங்கள் வருமாறு:
பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கக்கூடிய பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அனைத்து ஊழியர்களும் பெண்களாகவே இருக்க வேண்டும். நீதிபதி, அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள், தட்டச்சு செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள், போலீஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட அனைவருமே பெண்களாக இருக்க வேண்டும்.
அனைத்துலகப் பெண்கள் தினம் முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளுக்கு தீர்வு சொல்வது மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. பெண்களே முழுக்க முழுக்க நீதிமன்றங்களில் பணியாற்றுவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தவிதமான பயமோ, யாருடைய வற்புறுத்தலுமோ இல்லாமல் தைரியமாகவும், அழுத்தமாகவும், திருத்தமாகவும் சாட்சியம் கூற முடியும்.
இந்த சுற்றறிக்கை வழக்குரைஞர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
|