தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு சிறப்பிடம் பெறும் ஏழு பெண் தெய்வங்கள் சப்தமாதர்கள். இவர்களை மாத்ருக்கள் என்றும், சப்த கன்னியர் என்றும்
அழைக்கின்றனர்.திருவரசமூர்த்திக்கு வெள்ளைக் குதிரையும், சொக்காயி அம்மனுக்கு சிவப்பு குதிரையும், பெரிய யானையும், ஒரு குட்டி யானையுடன் கூடிய
சிங்கவாகனமும் வாகனங்களாக உள்ளன. இவை சுதைவடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அருகில் நல்லான், பெத்தான், வீரனார் ஆகியகாவல்
தெய்வங்கள் உள்ளனர். இவர்களது கைகளில் பாம்பும், கதாயுதமும் உள்ளன. புதிதாக வாகனம் வாங்குவோரும், சாகுபடிக்கு முன்னதாக விவசாய இடுபொருட்கள்
வாங்குபவர்களும் இந்த காவல் தெய்வங்களின் முன்பு அவற்றை வைத்து பூஜித்த பிறகே பணிகளை துவக்குகின்றனர். இவ்வூரில் குடியிருப்பவர்கள் தங்களை
திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாப்பதாக நம்புகின்றனர். விஜயதசமியன்று சொக்காயி அம்மனை நாம் இருந்த இடத்தில்
இருந்தபடியே மனதில் நினைத்து, விரதம் இருக்க வேண்டும். நமக்கு வசதிப்படும் நாளில் இங்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால்
எண்ணியது நிறைவேறுவதுடன், மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் ஏற்படுவதாக நம்பிக்கை.
தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு சிறப்பிடம் பெறும் ஏழு பெண் தெய்வங்கள் சப்தமாதர்கள். இவர்களை மாத்ருக்கள் என்றும், சப்த கன்னியர் என்றும் அழைக்கின்றனர். திருவரசமூர்த்திக்கு வெள்ளைக் குதிரையும், சொக்காயி அம்மனுக்கு சிவப்பு குதிரையும், பெரிய யானையும், ஒரு குட்டி யானையுடன் கூடிய சிங்கவாகனமும் வாகனங்களாக உள்ளன. இவை சுதைவடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அருகில் நல்லான், பெத்தான், வீரனார் ஆகியகாவல் தெய்வங்கள் உள்ளனர்.
இவர்களது கைகளில் பாம்பும், கதாயுதமும் உள்ளன. புதிதாக வாகனம் வாங்குவோரும், சாகுபடிக்கு முன்னதாக விவசாய இடுபொருட்கள் வாங்குபவர்களும் இந்த காவல் தெய்வங்களின் முன்பு அவற்றை வைத்து பூஜித்த பிறகே பணிகளை துவக்குகின்றனர். இவ்வூரில் குடியிருப்பவர்கள் தங்களை திருட்டு மற்றும் தீமையான செயல்களில் இருந்து சப்தகன்னியர் பாதுகாப்பதாக நம்புகின்றனர்.
விஜயதசமியன்று சொக்காயி அம்மனை நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே மனதில் நினைத்து, விரதம் இருக்க வேண்டும். நமக்கு வசதிப்படும் நாளில் இங்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால் எண்ணியது நிறைவேறுவதுடன், மகிழ்ச்சியான வாழ்வும், சுபிட்சமும் சவுபாக்கியமும் ஏற்படுவதாக நம்பிக்கை. |