|
|||||
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - தமிழில் வேள்விக் குண்டம் நடத்த உத்தரவு! |
|||||
![]()
வருகிற ஜூலை மாதம் நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக வேள்வி குண்டங்கள் நிகழ்வில் தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவர் சந்திகேஸ்வரர் சேவை அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அப்போது தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழ் சைவத் திரு வழிப்பாட்டில் பட்டம் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழில் வேள்வி நடத்தி வருகிறேன். அகராதிகள், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் சாஸ்திரங்களிலிருந்து எடுத்த தமிழ் மந்திரங்கள் உள்ளன. சமஸ்கிருதத்துடன் சமமாகவே தமிழுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேள்வி ஆசிரியர்களுக்குச் சம உரிமை வழங்கி, வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய வேண்டும். மேலும் விமானக் கலசம், கருவறைகளில் தமிழ் வேள்வி ஆசிரியர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 26) நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், தமிழில் வேள்வி செய்ய அனுமதிப்பது குறித்துப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அதேபோல், வருங்காலங்களில் நடக்க இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் கும்பாபிஷேகங்களில் தமிழில் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடத்துவதற்கான செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வகுக்க வேண்டும்." என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவிட்டார்.
|
|||||
by hemavathi on 26 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|